Posts

Showing posts from 2021

Angle of sin - தேவதையின் தன்மீட்சி - Robert Bresson

Image
 1 கிளாஸிக் படைப்புக்கள் எப்போதும் இலட்சியவாதம் நோக்கித்தான் பேசும். அப்படிப்பட்ட ஒரு படைப்புத்தான் Angle of sin. இது ஒருவகை தன்மீட்சிக் கதை என்றே சொல்லலாம். minimalist style சினிமாவின் வலுவான தொடக்கம் எனவும் சொல்லலாம். இயக்குநர் Bresson முதல் படம். 1943 ல் வெளிவந்துள்ளது. டால்ஸ்டாய்ன் புத்துயிர்ப்பு நாவல் போன்ற கதை இது எனலாம். தன்னறம் என்பது கன்னியாஸ்திரியாகி சேவை செய்வதே என உணர்ந்து கன்னியாஸ்திரி மடத்திற்க்கு வரும் அன்னே மேரி, தான் செய்யாத திருட்டுக் குற்றத்திற்க்காக சிறையில் அடைபட்ட மரியாவைப் பார்த்து அவளை திருத்தி மகிழ்ச்சியான பாதைக்கு அழைத்துச் செல்ல முயலுவதே கதை.  கண்ணுக்கு கண் என்பது பழமொழி. ஒரு கண்ணத்தில் அடித்தால் மறுகண்னத்தைக் காட்டு என்பது பைபிளின் வாசகம். முதலாவது வாசகம் மனித மனதின் ஆழ் உள்ளத்தை காட்டும் படம். இரண்டாவது இலட்சியவாதத்தின் வாசகம், நேர் மறையானது. மனிதன் இயல்பிலே எதிர்மறையானவன். மரியா முதல் வாசகத்திற்க்கும், மேரி இரண்டாவது வாசகத்திற்க்கும் உரியவர்கள். இவ்விருவரின் முரண்பாடுகள் நமக்கு பலவித கேள்விகளை எழுப்புகிறது. 2.  மேரி மிகுந்த உற்சாகமானவளாக இருக...

Save the Cat - புத்தக வாசிப்பு பற்றி

Image
இந்த கட்டுரை புத்தகத்தில் இருக்கும் கருத்தின் தொகுப்பு.  என்னுடைய கருத்தை பதிவிடவில்லை.   Log Line: Log line மிகவும் முக்கியமான ஒன்று. அப்படி ஒன்றை சொல்ல முடியவில்லை என்றால் நிச்சயம் நம்முடைய கதை பார்வையாளர்களால் புரிந்துகொள்ள முடியாது. அதனால் முதலில் log line ஐ எழுதிவிட்டு திரைக்கதையை எழுதுவது பயனுள்ளதாக இருக்கும் அல்லது log line திரைக்கதையை மேலும் செழுமைப்படுத்தும். அதனைப் பற்றிய சில முக்கிய கருத்துகள், 1. முரண்பாடுகள் கொண்டாதகவும் உணர்ச்சிகரமானதாகவும் இருக்க வேண்டும். அதைப் படித்தால் நமைச்சல் எடுத்தவன் எப்படி சொறிய வேண்டும் என்ற ஆர்வம் கொண்டிருப்பானோ அதைப் போல இருக்க வேண்டும் 2.அது ஒரு மன உருவகத்தை உருவாக்க வேண்டும். அதனுள் முழுப் படமும் இருக்க வேண்டும், முடிந்தால் காலவரை இருக்க வேண்டும். கேட்டவுடன் மனதை அது வருட வேண்டும். 3. பார்வையாளர்கள் மற்றும் பட்ஜெட்: இது என்ன வகையான பார்வையாளர்களுக்கு? என்ன வகையான படம்? படத்தின் பட்ஜெட் 4. தீவிரமான தலைப்பு. Log lineம் படத்தின் தலைப்பும் படத்தைப் பற்றிய முழு விவரங்களை, ஆர்வத்தையும் தூண்டுவதாக இருக்கிறது.  அனுபவத்தை உபயோகப்படுத்தி...

Stalker - பட காட்சிகளின் பகுப்பாய்வு

Image
 Stalker படத்தின் காட்சிகளை பகுப்பாய்வு செய்து புரிந்துகொள்ளும் முயற்ச்சி. இதற்க்குப் பதிலாக இன்னோரு shot ஏன் வைக்க கூடாது என்று கேட்ப்பதைவிட, இது எந்த அளவிற்க்கு நமக்கு பதிப்பை ஏற்ப்படுத்தியிறுக்கிறது என்பது முக்கியம். இதனைக் கருத்தில் கொண்டு பகுப்பாய்வு செய்கிறேன். முதல் காட்சி  Shot: FS - Dolly IN லேசாக திறந்து இருக்கும் இரண்டு கதவுகளின் வழியே கட்டில் தெரிகிறது. சுவர்கள் எல்லாம் இருட்டில் இருக்க உள் அறையில் மட்டும் லேசான வெளிச்சம் இருக்கிறது. கேமிரா நகரும் போது நிச்சயம் நம்முடைய கவனம் அந்த சிறிய இடைவெளி வழியே தெரியும் அந்த காட்சியில் குவிக்கிறது. இது இயக்குனரின் மந்திரம் எனலாம். இடம் மற்றும் அதன் மக்களைக் காட்ட இது சிறந்த shot. இரண்டாம் காட்சி Shot: CU - Truck முதலில் டேபிளை Close up காட்டும் போது வீட்டின் பக்கத்தில் ரயில்வே லயன் இருப்பது கிளாஸ் ஆடுவதன் மூலம் காட்டப்படுகிறது. மெதுவாக Truck பண்ணி கட்டலில் படுத்து இருக்கும் ஒவ்வொருவராக காட்டப்படுகிறார்கள். எல்லோரும் முதலிக் தூங்குவது போல இருந்தாலும் Camera திரும்பவரும் போது ஒவ்வொருவராக கண் விழிக்கிறார்கள் காட்சி அந்த டேபிளில்...

கலை - ஒரு இலட்சியத்திற்கான ஏக்கம் -பகுதி 1

Image
 இது தர்கோவ்ஸ்கி எழுதிய கட்டுரையின் தமிழாக்கம். (Sculpting in time - Book) கலையின் இறுதி நோக்கம் என்னவென்பதை வரையறுப்பது முக்கியமென நான் நினைக்கிறேன். சினிமா இயல்பின் கலை பற்றிய பிரச்சனையை பிறகு பார்ப்போம்.  கலை ஏன் இருக்கிறது? யாருக்கு இது தேவை? உண்மையிலே யாருக்கு இது தேவை? இந்த மாதிரியான கேள்விகள் கவிஞர்கள் மட்டுமில்லாமல் உண்மையிலேயே கலையைப் பாராட்டக்கூடியவர்களாலும் கேட்க்கப்படுகிறது. இருபதாம் நூற்றாண்டில் கலைக்கும் அதன் பார்வையாளனுக்கும் இடையே இருக்கும் உறவு என்பது நுகர்வோர் என்ற அளவிலே இருக்கிறது.  நிறைய பேர்வழிகள் தனக்குத்தானே இந்த கேள்விகளை கேட்டுக்கொள்கிறனர். ஏதோ ஒருவகையில் கலையுடன் தொடர்புடையவர்கள் அதற்க்கென தனக்கான பிரித்தியேக பதில்களை வைத்திருக்கின்றனர். அலெக்சாண்டர் பிளாக் இவ்வாறு சொல்கிறார், கவிஞன் குழப்பத்திலிருந்து நல்லிணக்கத்தை உருவாக்குகிறான். புஸ்கின் கவிஞர்களுக்கு தீர்க்கதரிசனத்தின் பரிசு இருந்தது என நம்புகிறார். ஒவ்வொரு கலைஞனும் தனது சொந்த சட்டங்களால் ஆளப்படுகிறான். ஆனால் இது வேறு யாருக்கும் கட்டாயமானது இல்லை.  எந்த ஒரு சந்தரப்பத்திலும் கலையின் குற...

shoeshine - மனிதனின் அவநம்பிக்கையும், நாகரிக சமூகத்தின் குற்றவாளிகளும் - Vittorio De Sica

Image
 1 ஒரு சமூகம் கைவிடப்பட்ட சிறுவர்களை எப்படி நடத்துகிறது? அவர்கள் கொலைகாரர்களாக, திருடர்களாக பின்னாலில் மாறும்போது அவர்களுக்கு தண்டனை வாங்கிக்கொடுப்பதோடு நாம் ஆறுதல் அடைந்துகொள்கிறோம். கைவிடப்பட்ட சிறுவர்களை சமூக விரோதிகளாக மாற்றும் இந்த சமூகம் எந்தவிதமான தண்டனையையும் ஏற்றுக்கொள்வதில்லை.  சிறைதண்டனையை அனுபவிக்கும் அவர்களை நாம் என்ன விதமாக நடத்துகிறோம்? திருந்துவதற்க்கான வாய்ப்பா? இல்லை பழிக்குப் பழி வாங்கவா (ஒருவனை கொன்றுவிட்டான் என்பதற்க்காக அவனை தூக்கில் போட்டு அவனை கொன்றுவிடலாமா?) மனிதனின் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியாத மனிதர்கள் குற்றச்செயலில் மாட்டிக்கொண்டுவிடுகிறார்கள். கோபம் கொண்டு இன்னொருவனைத் தாக்கும் நபர்களின் நோக்கம் அவர்களை காயப்படுத்துவதோ இல்லை கொன்றுவிடுவதோ இல்லை. ஆனால் அப்படித் தாக்கப்படுபவர்கள் இறந்துவிட்டால் அவர்கள் குற்றவாளி ஆகிறார்கள். நம்முடைய சட்டத்திற்க்கு அப்படி பிரித்துப்பார்த்து சொல்வதற்க்கு எந்தவித கருவிகளும் இல்லை. கொலைகாரர்களை கொலைகாரர்களாக மட்டும் பார்க்கும்.  2 குதிரை வாங்க ஆசைப்படும் இரண்டு சிறுவர்கள். ரோம் சாலையில் ஷுவை பாலிஸ் செய்யும் வே...

Bicycle thieves - பட காட்சி பகுப்பாய்வு

Image
 முதற்க்காட்சி Shot: MWS பசியால் வாடிய கூட்டம் வேலைக்காக அந்த அதிகாரியைப் பார்த்து நிற்க்கும், ஆனால் அதிகாரியோ இல்லாத ரிச்சியை அழைப்பார்.  இதனை ஏன் MWS ல் எடுக்க வேண்டும்? கூட்டத்தைக் காட்ட வேண்டும் அதே சமயம் அவர்களின் உணர்ச்சிகளையும் காட்ட வேண்டும். MS வைத்தால் கூட்டம் தெரியாது ஆனால் உணர்ச்சி தெரியும், WS வைத்தால் கூட்டம் தெரியும் உணர்ச்சி தெரியாது. இரண்டும் தெரிய வேண்டுமானால் சரியான shot MWS.  இரண்டாவது காட்சி Shot: EWS வேலைவாய்ப்பு அலுவலகத்தின் முன் நிற்க்கும் கூட்டம் சிரிதாக தெரியும் அளவு கட்டம் பெரிதாக இருக்கிறது. வேலைவாய்ப்பு அலுவலகம் அந்த கூட்டத்தைப் பொருத்தவரை அவ்வளவு பெரிதாக இருக்கிறது, ஏனெனில் அடுத்த வேளை சோற்றுக்கு வழியில்லாமல் அங்கு நின்றிருக்கிறது கூட்டம். அந்த கூட்டத்திலிருந்து ஓடிவருகிறான் என்பதை இப்படிக்காட்டினால்தான் மேலே சொன்ன விசயங்கள் தெரிவிக்க முடியும். Folow up shot வைத்திருந்தால், ஓடிவருபவன் கூட்டத்திலிருந்து விலகி செல்வது போல இருக்கும், கதையின் படி அவன் திரும்ப அங்கு சென்று சேர வேண்டும்.  மூன்றாவது காட்சி Shot: FS ஒரே காட்சியாக கட் செய்யாமல் E...

இருவர் - படத்தின் காட்சிகளின் பகுப்பாய்வு

Image
 முதல் காட்சி Shot: MCU சிறுவனை அணைத்துக்கொண்டு தாய் ஒருத்தி கண்களை மூடியவாறு ரயிலின் ஜன்னலோரம் அமர்ந்திருக்கிறாள். ரயில் வேகமாக ஓடிக்கொண்டிருக்கிறது. கடந்தகாலம் ரயிலுக்கு வெளியே ஓடிக்கொண்டிருக்கிறது, அதனைப் பார்த்து லேசாக சிரித்தவாறு அந்த சிறுவன் இருக்கிறான். அவனது அம்மா அதனைப் பார்க்கவிரும்பாமல் தன் சோகங்களை மறைத்து கண்களை மூடிக்கொண்டிருக்கிறாள்.  இத னை ஏன் CU shot அல்லது MFS ல் எடுக்கவில்லை? ஒன்று :இருவரின் reaction ஐக் காட வேண்டும், மற்றது: அவர்கள் இரயில் பயணம் செய்வதைக் காட்ட வேண்டும். CU shots ல் reaction இருக்கும் ஆனால் ரயில் பயணத்தை இவ்வளவு சரியாகக் காட்ட முடியாது. MFS ல் ரயில் பயணம் இருக்கும் ஆனால் reactionஐ இவ்வளவு அழுத்தமாகக் காட்ட முடியாது.  தங்களின் கடந்தகாலத்தைவிட்டு புதுய உலகுக்கு அல்லது எதிர்காலத்துக்கு செல்வோரின் உணர்வு அங்கிருக்கிறது. அதை மிகச்சரியாக கடத்த இந்த shot உதவுகிறது.  இரண்டாம் காட்சி Shot: FS  - Dolly In படத்தயாரிப்பாளர் தனது காரினுள் ஏறப்போகும் போது மோகன்லாலும் அவரது தாத்தாவும் பின்னால் வந்து உதவி கேட்க்கின்றனர். இந்த காட்சியில் ஏன் ...

சாதாரணத்தன்மையின் கலை வெளிப்பாடு - Bicycle thieves- Vittorio De Sica

Image
 1 சாதாரண வாழ்க்கையை படம் பிடிக்கும் படங்கள்தான் ஆனால் அது அவர்களை மட்டுமே இல்லை, அந்த சமூகத்தையே பிரதிபலிக்கும் என்றால் அது புதுயதார்த்தவாத (Neorealism) சினிமா எனலாம். புதுயாதார்த்தவாதம் என்பதை  யதார்த்தவாதத்திலிருந்து விலகி யதார்த்தத்தை சித்தரிக்க முற்படும் ஒரு கலை எனலாம்.  முசோலினியால் கட்டப்பட்ட சினிமா ஸ்டுடியோ உலகப் போரில் பாதிப்படைந்ததும், இயக்குனர்கள் குறைந்த பட்ஜெட்டில், தெருக்களில் எடுக்கப்பட வேண்டிய கட்டாயம் உருவாகிறது. அது புதுயாதார்த்தவாத சினிமாவை நோக்கித் தள்ளுகிறது. விக்டோரியோ டி சிக்கா அதில் முதன்மையான இயக்குனர்களில் ஒருவர். அதை இத்தாலியின் புதுயாதார்த்தவாதம் எனவும் கூறுவர். 2 ரிச்சிக்கு கடைசியாக கிடைக்கும் போஸ்டர் ஒட்டும் வேலை ஒரு நிபந்தனையின் பேரில் கிடைக்கிறது. அந்த நிபந்தனை என்பது சைக்கிள் இருக்க வேண்டும். உண்மையில் அவனிடம் இல்லை. உண்மையைச் சொன்னால் வேலை கிடைக்காது, அது மட்டுமில்லாமல் பொய் சொன்னதற்க்காக அடுத்த இரண்டு வருடம் கழித்துத்தான் வேறு வேலையும் கிடைக்கும். இருப்பதைவிடவும் மனமில்லை. இருக்கிறது என பொய் சொல்லிவிட்டு வந்துவிடுகிறான். நடுத்தர ஏழை மக்க...

உண்மையை நோக்கிய ஒரு பயணம் - புணுவல் - La Voie Lactée (The Milky Way) - 1969

Image
1  ஒரு பயணம் என்பது வாழ்வின் தருணங்களை மாற்றக்கூடியது.  பயணத்தில் புறமும் அகமும் ஒன்றே என காணும் சில நொடிகள் வாய்க்கும் அற்புதகணம் நிகழும். நீண்ட கடற்க்கரை, அழகிய மலைப்பகுதி என மனதில் கற்ப்பனை செய்துபாருங்கள் நான் சொல்லவருவதென்ன எனப் புரியும்.  புணுவலின் திரைவாழ்க்கை என்பது மூன்று கட்டங்கள். முதல் கட்டத்தில் dalli வுடன் சேர்ந்து மூன்று படங்களை இயக்கிய பிறகு, மெக்ஸிக்கோ சென்றுவிடுகிறார். அங்கு இயக்கிய படங்களின் கலை அம்சம் குறைவு, மறுபடியும் ஸ்பெயின்/பிரஞ்சு திரும்பிவிடுகிறார். அங்கு அவரது கடைசிகட்ட மற்றும் முக்கிய கலைப் படங்களை இயக்கி இருக்கிறார். நாம் பார்க்கும் படம் அவரது கடைசிகட்ட காலத்து முக்கிய படம்.  2 இரு பிரஞ்சு யாத்திரிகர்கள் உணவகத்தில் இருந்து  விரட்டப்பட்டதும் ஊரின் ஒதுக்குப்புறத்தில் உறங்குகிறார்கள். இடி மின்னல் கண்டு நள்ளிரவில் எழுந்து கொள்கிறார்கள். மழை பொழிகிறது. ஒரு யாத்திரிகர் மழையில் போய் நின்று கொண்டு கடவுள் இருக்கிறார் என்றால் என்மேல் இடி விழட்டும் எனச் சொல்லி ஒன்று, இரண்டு, மூன்று என எண்ணுகிறார். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை என்றதும் ஒதுக...

காமமும் புனுவலும் - l'age d'or (Golden Age) - 1930

Image
மனிதன் எல்லாவற்றையும் குழப்பமானதாகவும், கடினமானதாகவும் மாற்றிவிட்டானோ என்ற கேள்வி மனதில் எழுந்துகொண்டிருக்கிறது.  விலங்குகள் உறவு கொள்ள எளிதான விதி என்பது வலிமை மட்டுமே. ஆனால் மனித சமூகம் இந்த காமத்தை குழப்பமானதாக மாற்றியதைப் போல வேறு எதையும் இல்லை என்றே சொல்லலாம். அப்படி என்னதான் சமூகத்திற்க்கும், மக்களுக்கும் இதன் மேல் கோபம். கடுமையான விதிகள். புனுவல் தன்வரலாற்று நூலில் பின்வருமாறு கூறுகிறார். " Men of my generation, particularly if they’re Spanish, suffer from a hereditary timidity where sex and women are concerned. Our sexual desire has to be seen as the product of centuries of repressive and emasculating Catholicism, whose many taboos… have turned normal desire into something exceptionally violent."   காமம் என்ற சொல் மனிதனின் இச்சை (ஆசை) என்ற பொருளில் நாம் பார்த்தால். சிலர் பொருட்க்கள் சேர்ப்பதில் ஆர்வமாய் இருக்கின்றனர், அவர்களை முதலாளித்துவர்கள் என இப்படத்தில் நாம் அடையாளம் காணலாம். மதம் மக்களை ஒன்றுபடுத்துகிறது, பெரும் திரளாக ஆக்குகிறது. பின்னாலில் மக்களை ஆளுகிறது. மாற...