Angle of sin - தேவதையின் தன்மீட்சி - Robert Bresson

 1

கிளாஸிக் படைப்புக்கள் எப்போதும் இலட்சியவாதம் நோக்கித்தான் பேசும். அப்படிப்பட்ட ஒரு படைப்புத்தான் Angle of sin. இது ஒருவகை தன்மீட்சிக் கதை என்றே சொல்லலாம். minimalist style சினிமாவின் வலுவான தொடக்கம் எனவும் சொல்லலாம். இயக்குநர் Bresson முதல் படம். 1943 ல் வெளிவந்துள்ளது. டால்ஸ்டாய்ன் புத்துயிர்ப்பு நாவல் போன்ற கதை இது எனலாம். தன்னறம் என்பது கன்னியாஸ்திரியாகி சேவை செய்வதே என உணர்ந்து கன்னியாஸ்திரி மடத்திற்க்கு வரும் அன்னே மேரி, தான் செய்யாத திருட்டுக் குற்றத்திற்க்காக சிறையில் அடைபட்ட மரியாவைப் பார்த்து அவளை திருத்தி மகிழ்ச்சியான பாதைக்கு அழைத்துச் செல்ல முயலுவதே கதை. 

கண்ணுக்கு கண் என்பது பழமொழி. ஒரு கண்ணத்தில் அடித்தால் மறுகண்னத்தைக் காட்டு என்பது பைபிளின் வாசகம். முதலாவது வாசகம் மனித மனதின் ஆழ் உள்ளத்தை காட்டும் படம். இரண்டாவது இலட்சியவாதத்தின் வாசகம், நேர் மறையானது. மனிதன் இயல்பிலே எதிர்மறையானவன். மரியா முதல் வாசகத்திற்க்கும், மேரி இரண்டாவது வாசகத்திற்க்கும் உரியவர்கள். இவ்விருவரின் முரண்பாடுகள் நமக்கு பலவித கேள்விகளை எழுப்புகிறது.




2. 

மேரி மிகுந்த உற்சாகமானவளாக இருக்கிறாள். மற்ற கன்னியாஸ்திரிகள் ஒருவகையில் பொறமைப்படும் அளவு அவளது செயல்பாடுகள் இருக்கிறது. மடத்தின் மதருக்கு அவளை மிகவும் பிடித்துப்போகிறது. சிறையிலிருந்து விடுதலையான மரியா மடத்திற்க்கு திரும்ப வேண்டுமென இறைவனிடம் வேண்டிக்கொள்வாள் மேரி. 



மரியா சிறையிலிருந்து விடுதலையாகி நேராக துப்பாக்கி கடைக்குச் சென்று அதனை வாங்குகிறாள். பிறகு காதலனது இடத்துக்குச் சென்று அவனை சுட்டுவிட்டு எதுவும் நடக்காதது போல மடத்திற்க்கு வந்து அடைக்கலம் தேடுகிறாள். மேரி ஏற்க்கனவே வேண்டிக்கொண்டிருந்தபடி மரியா வந்துவிட்டாள் என நினைத்து மகிழ்ச்சியடைகிறாள். மரியாவுக்கு எப்படியாவது கற்ப்பித்து நேர்பாதையில்/மகிழ்ச்சியான வழியில், உண்மையான ஆனந்தத்தின் பாதையில் திருப்பிவிட வந்த வாய்ப்பு என மேரி எண்ணுவாள். ஆனால் மரியா துடுக்கானவளாகவும், எரிந்துவிழுபவளாகவும் இருக்கிறாள். 



 
மரியாவை நல் வழிப்படுத்த மேரி அவளை பூந்தோட்டத்திற்க்கு அழைத்துச் செல்லுவாள். உண்மையான மகிழ்ச்சி என்னவென்று காட்டுவதாக கூறிக்கொண்டே செல்லும் போது, மதர் ஒருவரால் அவர்கள் நிறுத்தப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படுவார்கள். உங்களின் வேலையைவிட்டு விட்டு எங்கே செல்கிறீர்கள் என மதர் கேட்ப்பார். மேரி பூந்தோட்டத்திற்க்கு செல்வதாக சொல்லுவாள். இது மடத்தின் விதிகளை மீறியதாகும். உங்களுக்கு விதிக்கப்பட்ட வேலைக்குச் செல்லுங்கள் என்பார் மதர். விதி? இந்த இடத்தில் இதயத்தின் விதிதானே இருக்கிறது என்பால் மேரி. மதரின் எச்சரிக்கையை பார்த்து மரியாவை அழைத்துச் செல்லும் அந்த திட்டத்தைக் கைவிட்டு, மதரிடம் விழுந்து வணங்குவாள் மேரி. இது ஒரு முரண். இறைவனை அடைய இதயத்தின் விதி - அன்புதானே என மேரி சொல்லுவாள் ஆனால் இங்கு மடத்தின் விதிதான் பெரிது என மதர் சொல்லுவார். இறைவனை அடைய நிறுவப்பட்ட நிறுவனங்கள், தங்களை செயல்பட வைக்கப்பட்ட விதிகள், தனிப்பட்ட மனிதன் இறைவனை அடைய குறுக்கே நிற்க்குமானால் என்ன செய்வது? எல்லா நிறுவனங்களும் செய்யும் அதே விசயத்தைதான் கன்னியாஸ்திர்களின் மடமும் செய்தது.




இந்த மடத்தில் இருக்கும் யாருக்கும் உன்னைப் பிடிக்கவில்லை, மேலும் அனைவரும் உன் மேல் தவறான எண்ணங்களைத்தான் கொண்டிருக்கிறார்கள் என மரியா மேரியிடம் சொல்லுவாள். இதனால் குழப்பத்திற்க்கு ஆளான மேரி ஒவ்வொரு கன்னியாஸ்திரியிடமும் தன்னைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் எனக் கேட்ப்பாள். ஒவ்வொருவரும் அவளைப் பற்றி தவறான அபிபிராயத்தை சொல்லுவதைக் கேட்டு தாங்கிக்கொள்ளாமல் சினம் அடைவாள் மேரி. ஒருகட்டத்தில் தன்னைப் பற்றிச் சொல்லிக்கொண்டிருக்கும் கன்னியாஸ்திரி மீது எரிந்து விழுந்து அவளைப் பற்றி திட்டுவாள் மேரி. தன்னைப் பற்றி அபிபிராயம் சொன்னதற்க்கு நன்றி என அந்த கன்னியாஸ்திரி சொன்னதும் தன்னுடைய தவறை மேரி உணர்ந்து அவளிடம் மன்னிப்புக் கேட்ப்பாள் மேரி. ஒருவகையில் தான் யார் என அவள் உணர்ந்துகொள்ளும் முதல் சந்தர்ப்பம் அவளுக்கு வாய்க்கிறது. தன்னகங்கரமே இறைவனை அடைவதற்க்கான தடைக்கள் என்பதை உணர்ந்தும் மேரியால் அதிலிருந்து வெளியே வரமுடியவில்லை. 

இந்த கோபத்தில் இருந்த மேரி, பைப்பிள் படிக்கும் போது கன்னியாஸ்திரிகள் பூனையிடம் விளையாடுவதைப் பார்த்து கோபப்பட்டு அதனைத் தூக்கி அறைக்கு வெளியே விட்டுவிடுவாள். மிருகத்திடம் அன்பாக நடக்கவில்லை எனச் சொல்லி மேரி மீது குற்றம்சாட்டப்பட்டு அவளை மடத்திற்க்கு வெளியே அனுப்பப்படுகிறாள். மதருக்கு மேரியை அனுப்புவதில் வருத்தம்தான். மடத்தின் விதிகள் மதரின் விருப்பத்திற்க்கு எதிராக இருக்கிறது. மதர் நினைத்தாலும் ஒன்றும் செய்வதற்க்கில்லை. தொக்கி நிற்க்கும் கேள்வி அதேதான். 



திருட்டில் மாட்டிவிட்டதால் தனது காதலனை கொல்லுமளவு துடுக்கானவாளாக மாறியிருப்பது ஏன்? மரியா ஏன் பழிவாங்கும் இயல்பினளாக இருக்கிறாள்? அவளுடைய மனதின் அடியாழத்தை படம் மேரியினது போலக் காட்டவில்லை. 

மேரி வீட்டிற்க்குச் செல்லாமல் மடத்தின் பின்பக்கம் பொந்தின் வழியே தினமும் வந்து இரவில் தங்கிச் செல்கிறாள். அப்படியோரு நாள் வரும்போது மயங்கி இறக்கும் தருவாயை நெருங்கிறாள். அவளைக் கண்டேடுத்து மடத்தில் படுக்கவைக்கின்றனர். மரியா மேரியின் அருகிலே இருந்து கவனித்துக்கொள்கிறாள். மரியாவை சரியாக புரிந்து கொள்ளாமல் வெளிச்சத்தின் முன் நிறுத்திவிட்டதாகவும், மரியா ஏதோ பெரிய தவறை செய்துவிட்டு இங்கு வந்து ஒழிந்துகொண்டாதாகவும் மேரி சொல்வதை எரிச்சலுடன் மறுக்கிறாள் மரியா. தான் இன்னும் 100 ஆண்டுகள் வேண்டுமென்றாலும் சேவை செய்யத் தயாராக இருப்பதாக்ச் சொல்லுகிறாள். கடைசியாக மேரி மரணத் தருவாயில் இருப்பதைப் பாக்கச் சகிக்காமல் மாடியிலிருந்து இறங்கி போலீஸிடம் சரண்ணடைகிறாள் மரியா. தன்னுடைய தவறை/தீய எண்ணத்தை மேரியின் தியாகத்தால் மீட்சியளித்ததாக மரியா எண்ணி அழுதவாறு அவளது கைகளை நீட்டி கைவிலங்கை ஏற்றுக்கொள்கிறாள்.  


தன் அகங்காரத்தை விட்டு சேவை செய்வதே தன்னறம் என்பதை உணர்ந்த நொடி மேரிக்கும் தன்மீட்சி வந்துவிடுகிறது.  மேரியின் தியாகத்தால் மரியாவுக்கு தன்மீட்சி வந்துவிடுகிறது. இரண்டு தேவதைகளின் தன்மீட்சிக் கதையிது.

3


"ஒரு படத்தை புரிந்துகொள்ளுவதற்க்கு முன்பு மக்கள் அதை உணரவிரும்புகிறேன். புத்தியின் முன் உணர்வுகள் எழுகின்றன" என்பது ப்ரெஸனின் கூற்று.  

மற்ற படங்களைப் பார்க்கும் போது (தர்ஸ்க்கோவஸ்கியைத் தவிர) படத்தின் shot கள் நீண்ட நேரம் கொண்டதாக இருக்கிறது. உதாரணமாக மரியா தனது காதலனைக் கொலை செய்யச் செல்லும் போது, காலிங் பெல்லை அடித்துவிட்டு சுவரோரம் சாய்ந்து அவனுக்காக காத்துநிற்க்கிறாள். கதவை திறந்துகொண்டு காதலன் வருவது நிழலாக சுவரில் விழுகிறது. மறைத்து வைத்த துப்பாக்கியை எடுத்து அவனைச் சுடுகிறாள். இது முழுவதும் ஒரே shotல் இருக்கிறது. காதலனைக் காட்டவில்லை அவன் இறந்துவிழுவதைக் காட்டவில்லை. ஆனால் உணர்ச்சிகளை எளிதாக கடத்திவிடுகிறார் இயக்குநர். தர்க்கோவஸ்கிக்கு இது ஒரு பாதிப்பை ஏற்ப்படுத்தி இருக்குமென நினைக்கிறேன். எடிட்டிங் பண்ணி தொடர்ந்து கட் செய்வது ஹாலிவுட் பட பாணி. அது நிச்சயம் பார்வையாளர்களின் ஆர்வத்தை தக்க வைக்கும் உத்தி. 
அதே சமயம் உணர்ச்சிகளை, அந்த இடத்தின் சூழலை நமக்குள் முளைக்க வைக்க நீண்ட நேரம் கொண்ட காட்சியமைப்புத்தான் உதவும். 

ஒரே shotல் கதையின் பின்னனியும் சேர்த்து ஒற்றை நிகழ்வாக காட்டுதல் ஒரு சிறப்பு. கன்னியாஸ்திரிகள் மாடியில் இறக்கப்போகும் மேரியைப் பார்க்க போகின்றனர். அதே சமயம் மரியாவைக் கைது செய்ய காவல்துறையினர் மடத்திற்க்கு வருகின்றனர். இது உணர்ச்சிகளை குவியலாக்கும். உதாரணமாக மேரி இறக்க இருக்கும் சோகம், காட்சியில் எதிர்பாராமல் வரும் போலீஸினால் வரும் பயம். உணர்ச்சிகள் அளவில் மாறுபட்ட அனுபவத்தை தரும் படமென்றால் மிகையில்லை. அதனாலேயே இது ஒரு கலைப்படைப்பாகிறது.



நடிகர்கள் நடிப்பதைப் போல இல்லை ஆனால் எல்லாவித உணர்ச்சிகளையும் கடத்திவிடுகிறார்கள். உண்மையில் படத்தில் ஆழ்ந்துவிட்டால், நிச்சயம் இது 1943ம் வருட படம் எனத் தோன்றாது. minimalist பாணி சினிமா என்று ப்ரெஸ்ன் படங்களைச் சொல்வதுண்டு. எல்லாவற்றையும் (நடிப்பு, எடிட்டிங்....) தேவையான அளவு பயன்படுத்தி அதே சமயம் கடத்த வேண்டிய உணர்ச்சிகளை கடத்துவது என சொல்லலாம். ஒருவேளை அன்றைய நாடகங்களில் இருந்து படம் தனித்து தெரிய வேண்டும் என்பதன் கவனமாக இருக்கலாம். 



Comments

Popular posts from this blog

Movie Review- ஜிகர்தண்டா டபுள்எக்ஸ்

உண்மையை நோக்கிய ஒரு பயணம் - புணுவல் - La Voie Lactée (The Milky Way) - 1969

புனுவலின் மீமெய்யியல் - Un Chien andalou (An Andalusian Dog) -1920