Posts

Showing posts from May, 2021

சாதாரணத்தன்மையின் கலை வெளிப்பாடு - Bicycle thieves- Vittorio De Sica

Image
 1 சாதாரண வாழ்க்கையை படம் பிடிக்கும் படங்கள்தான் ஆனால் அது அவர்களை மட்டுமே இல்லை, அந்த சமூகத்தையே பிரதிபலிக்கும் என்றால் அது புதுயதார்த்தவாத (Neorealism) சினிமா எனலாம். புதுயாதார்த்தவாதம் என்பதை  யதார்த்தவாதத்திலிருந்து விலகி யதார்த்தத்தை சித்தரிக்க முற்படும் ஒரு கலை எனலாம்.  முசோலினியால் கட்டப்பட்ட சினிமா ஸ்டுடியோ உலகப் போரில் பாதிப்படைந்ததும், இயக்குனர்கள் குறைந்த பட்ஜெட்டில், தெருக்களில் எடுக்கப்பட வேண்டிய கட்டாயம் உருவாகிறது. அது புதுயாதார்த்தவாத சினிமாவை நோக்கித் தள்ளுகிறது. விக்டோரியோ டி சிக்கா அதில் முதன்மையான இயக்குனர்களில் ஒருவர். அதை இத்தாலியின் புதுயாதார்த்தவாதம் எனவும் கூறுவர். 2 ரிச்சிக்கு கடைசியாக கிடைக்கும் போஸ்டர் ஒட்டும் வேலை ஒரு நிபந்தனையின் பேரில் கிடைக்கிறது. அந்த நிபந்தனை என்பது சைக்கிள் இருக்க வேண்டும். உண்மையில் அவனிடம் இல்லை. உண்மையைச் சொன்னால் வேலை கிடைக்காது, அது மட்டுமில்லாமல் பொய் சொன்னதற்க்காக அடுத்த இரண்டு வருடம் கழித்துத்தான் வேறு வேலையும் கிடைக்கும். இருப்பதைவிடவும் மனமில்லை. இருக்கிறது என பொய் சொல்லிவிட்டு வந்துவிடுகிறான். நடுத்தர ஏழை மக்க...

உண்மையை நோக்கிய ஒரு பயணம் - புணுவல் - La Voie Lactée (The Milky Way) - 1969

Image
1  ஒரு பயணம் என்பது வாழ்வின் தருணங்களை மாற்றக்கூடியது.  பயணத்தில் புறமும் அகமும் ஒன்றே என காணும் சில நொடிகள் வாய்க்கும் அற்புதகணம் நிகழும். நீண்ட கடற்க்கரை, அழகிய மலைப்பகுதி என மனதில் கற்ப்பனை செய்துபாருங்கள் நான் சொல்லவருவதென்ன எனப் புரியும்.  புணுவலின் திரைவாழ்க்கை என்பது மூன்று கட்டங்கள். முதல் கட்டத்தில் dalli வுடன் சேர்ந்து மூன்று படங்களை இயக்கிய பிறகு, மெக்ஸிக்கோ சென்றுவிடுகிறார். அங்கு இயக்கிய படங்களின் கலை அம்சம் குறைவு, மறுபடியும் ஸ்பெயின்/பிரஞ்சு திரும்பிவிடுகிறார். அங்கு அவரது கடைசிகட்ட மற்றும் முக்கிய கலைப் படங்களை இயக்கி இருக்கிறார். நாம் பார்க்கும் படம் அவரது கடைசிகட்ட காலத்து முக்கிய படம்.  2 இரு பிரஞ்சு யாத்திரிகர்கள் உணவகத்தில் இருந்து  விரட்டப்பட்டதும் ஊரின் ஒதுக்குப்புறத்தில் உறங்குகிறார்கள். இடி மின்னல் கண்டு நள்ளிரவில் எழுந்து கொள்கிறார்கள். மழை பொழிகிறது. ஒரு யாத்திரிகர் மழையில் போய் நின்று கொண்டு கடவுள் இருக்கிறார் என்றால் என்மேல் இடி விழட்டும் எனச் சொல்லி ஒன்று, இரண்டு, மூன்று என எண்ணுகிறார். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை என்றதும் ஒதுக...

காமமும் புனுவலும் - l'age d'or (Golden Age) - 1930

Image
மனிதன் எல்லாவற்றையும் குழப்பமானதாகவும், கடினமானதாகவும் மாற்றிவிட்டானோ என்ற கேள்வி மனதில் எழுந்துகொண்டிருக்கிறது.  விலங்குகள் உறவு கொள்ள எளிதான விதி என்பது வலிமை மட்டுமே. ஆனால் மனித சமூகம் இந்த காமத்தை குழப்பமானதாக மாற்றியதைப் போல வேறு எதையும் இல்லை என்றே சொல்லலாம். அப்படி என்னதான் சமூகத்திற்க்கும், மக்களுக்கும் இதன் மேல் கோபம். கடுமையான விதிகள். புனுவல் தன்வரலாற்று நூலில் பின்வருமாறு கூறுகிறார். " Men of my generation, particularly if they’re Spanish, suffer from a hereditary timidity where sex and women are concerned. Our sexual desire has to be seen as the product of centuries of repressive and emasculating Catholicism, whose many taboos… have turned normal desire into something exceptionally violent."   காமம் என்ற சொல் மனிதனின் இச்சை (ஆசை) என்ற பொருளில் நாம் பார்த்தால். சிலர் பொருட்க்கள் சேர்ப்பதில் ஆர்வமாய் இருக்கின்றனர், அவர்களை முதலாளித்துவர்கள் என இப்படத்தில் நாம் அடையாளம் காணலாம். மதம் மக்களை ஒன்றுபடுத்துகிறது, பெரும் திரளாக ஆக்குகிறது. பின்னாலில் மக்களை ஆளுகிறது. மாற...

புனுவலின் மீமெய்யியல் - Un Chien andalou (An Andalusian Dog) -1920

Image
கலையின் நோக்கம் அறிதலே.  தர்க்கத்துக்கு எதிரானது கலை, அது கற்ப்பனையால் (புனைவால்) உருவாவது. எப்படி விமானம் தரையில் ஓடி பின் வானில் பறக்கிறதோ அதே போல. விமானம் பறக்க வேண்டுமானால் அது தரையில் சில நிமிடங்கள் ஓடி ஆக வேண்டும். ஆனால் விமானம் என்பது பறப்பதற்க்காகவே ஒழிய ஓடுவதற்க்காக படைக்கப்படதில்லை. அதுபோலவே கலைகளும். அதன் நம்பும் தன்மைக்காக மட்டுமே தர்க்கம் தேவை. பிறகு அது வானில் பறக்க வேண்டும். அப்படியில்லாமல் கடைசி வரையில் தரையில் ஓடிக்கொண்டிருந்தால், நிச்சயம் நீங்கள் விமானத்தை விரும்பமாண்டீர்கள் தானே? சினிமா என்னும் கலையும் அதுபோலவே, தர்க்கத்தை (logic)  நம்பவைக்க மட்டும் பயன்படுத்த வேண்டும்.  அப்படியில்லாமல் முற்றும் கற்ப்பனையால் நிகழ்த்திய ஒரு படம் என்றால் அது புனுவல் இயக்கிய Un Chien andalou. படத்தின் முன்னும் பின்னும் இணைக்கும் சரடு எதும் இல்லை. புனுவல் தன் படத்தைப் பற்றி பின்வருமாறு கூறுகிறார். "no idea or image that might lend itself to a rational explanation of any kind would be accepted" அதனால் உங்களால் படத்தின் கதை என்ன என்று சொல்லிவிட முடியாது. அப்படியொன்று இரு...