புனுவலின் மீமெய்யியல் - Un Chien andalou (An Andalusian Dog) -1920

கலையின் நோக்கம் அறிதலே.  தர்க்கத்துக்கு எதிரானது கலை, அது கற்ப்பனையால் (புனைவால்) உருவாவது. எப்படி விமானம் தரையில் ஓடி பின் வானில் பறக்கிறதோ அதே போல. விமானம் பறக்க வேண்டுமானால் அது தரையில் சில நிமிடங்கள் ஓடி ஆக வேண்டும். ஆனால் விமானம் என்பது பறப்பதற்க்காகவே ஒழிய ஓடுவதற்க்காக படைக்கப்படதில்லை. அதுபோலவே கலைகளும். அதன் நம்பும் தன்மைக்காக மட்டுமே தர்க்கம் தேவை. பிறகு அது வானில் பறக்க வேண்டும். அப்படியில்லாமல் கடைசி வரையில் தரையில் ஓடிக்கொண்டிருந்தால், நிச்சயம் நீங்கள் விமானத்தை விரும்பமாண்டீர்கள் தானே? சினிமா என்னும் கலையும் அதுபோலவே, தர்க்கத்தை (logic)  நம்பவைக்க மட்டும் பயன்படுத்த வேண்டும். 





அப்படியில்லாமல் முற்றும் கற்ப்பனையால் நிகழ்த்திய ஒரு படம் என்றால் அது புனுவல் இயக்கிய Un Chien andalou. படத்தின் முன்னும் பின்னும் இணைக்கும் சரடு எதும் இல்லை. புனுவல் தன் படத்தைப் பற்றி பின்வருமாறு கூறுகிறார்.

"no idea or image that might lend itself to a rational explanation of any kind would be accepted"

அதனால் உங்களால் படத்தின் கதை என்ன என்று சொல்லிவிட முடியாது. அப்படியொன்று இருந்தால்தானே சொல்ல. மேகங்கள் நிலவை கிழித்துக்கொண்டு செல்லும் காட்சியை  இரவில்கண்டதாக புனுவல் ஒரு தன் நண்பன் Salvador Dalíயிடம் சொல்லுகிறார். தன் உள்ளங்கையில் எறும்புகள் ஊர்ந்ததாக தன் கனவை புனுவலிடம் சொல்லுகிறார் Dali. புனுவலுக்கு படத்திற்க்கான விதை கிடைத்துவிட்டதாகச் சொல்லி இருவரும் படம் எடுக்கும் வேலையில் இறங்கினர். வெறும் ஆறு நாட்களில் திரைக்கதை எழுதிமுடிக்கப்பட்ட படம். 17 நிமிடங்கள் ஓடும் குறும்படமாக சில வாரங்களில் தயாரானது. அதெலாம் ஒருபுறம் இருக்க, இந்த படம் ஏன் சிறந்த படமாக இருக்க வேண்டும்? அதன் காரணமென்ன?




ஜெயமோகன் மீமெய்யியல் [சர்ரியலிசம்] இவ்வாறு வரையறுக்கிறார்.

" அதீதநிலைகளில் மட்டுமே மனிதனின் உண்மையான சாரம் வெளிவருகிறது என்று வாதிடும் அழகியல்மரபு"

மீமெய்யியல் சார்ந்து உருவாக்கப்படும் படங்களின் முன்னோடிப்படமிது. ஜெயமோகன் இவ்வாறு மேலும் இதனை விளக்குகிறார். மனிதனை சாதாரண நிலையிலிருக்கும் (அன்றாட நிகழ்வில் இருக்கும்) மனிதனை ஆராய்தல் ஒரு முறை.  அதே மனிதனை இக்கட்டான அல்லது அதீதநிலைக்கு கொண்டு சென்று ஆராய்தல் மற்றொரு முறை. சாதாரண நிலையிலிருந்த மனிதன் அதீதநிலையிலும் அவ்வாறே இருப்பானா இல்லை அவனது அடிமனதின் ஆழத்தில் இருக்கும் வேறு ஒருவன் வெளியே வருவானா? சிக்மண்ட் பிராய்ட்ன் பாதிப்புக்கள் இருக்கும் ஒரு வகைமை இது. எப்படி நம் முன்னால் நிறைந்து ஓடிக்கொண்டிருக்கும் நதி மேல் பரப்பில் அமைதியாக தோன்றினாலும், அடியாளத்தில் அதன் சீற்றம் இருந்து கொண்டு இருக்குமோ அது போல. எந்த புத்துல எந்த பாம்பு இருக்குமோ யாருக்கு தெரியும்? என்ற பழமொழி ஞாபகத்திற்க்கு வருகிறது. 



நிலவை மேகங்கள் சாதரணமாக கடந்து செல்லும் நிகழ்வை பார்த்துக்கொண்டிருக்கும் ஒருவன், தன் மனத்தில் ஒரு அழகான பெண்ணின் கண்களை சவரக்கத்தியால் அறுப்பதைப் போல உணர்கிறான். எவ்வளவு ரம்மியமான காட்சியை பால்கனியில் நின்று காணும் ஒருவன், தன் மனதுக்குள் அவ்வளவு குரூரமான என்ணதைக்கொள்கிறான். இப்படி பல படிமங்களைக் கொண்டு உருவாக்கப்பட்டதுதான் இந்த படம். இன்னோரு முக்கிய படிமம் என்பது உள்ளங்கைகளின் துளைகளிலிருந்து வெளியே வரும் எறும்புகள். சற்றும் தர்க்கத்திற்க்கு வாய்ப்பளிக்காமல் காட்சிகளாக நகர்ந்து செல்கிறது. அதே சமயம் அதன் திடுக்கிடும் தன்மை நம்மை அதிரவைக்கிறது. 1920களில் எடுக்கப்பட்ட படம் என்றாலும் இன்னும் அந்த கண்களை அறுக்கும் காட்சி நம்மை அதிரவைக்கிறது. 




நாம் காட்சியுடன் ஒன்ற தர்க்கம் தேவை, அப்படி இல்லை என்றால் நாம் அதிலிருந்து வெளியேறிவிடுவோம். இதில் தர்க்கத்தின் குறையை நிரைசெய்ய பயன்பட்டிருப்பது இந்த திடுக்கிடல்தான். பெண்ணின் மார்புகளை தடவிக்கொண்டிருக்கும் ஒருவன் தன் பார்வை போய் இறந்துகொண்டிருக்கிறான். மனிதனின் பிரக்ஞை இந்த அதீதநிலைகளில் இருந்து ஒருபோதும் விலகாது என ஜெயமோகன் தன் கட்டுரை ஒன்றில் சொல்வது போல, அதுவே நம்மை காட்சியுடன் தொடர்ந்து இணைக்கவைக்கும் பாலம். பின்னர் நாம் அதன் தரிசனங்களை தரிசிக்கலாம். 

Comments

Popular posts from this blog

Movie Review- ஜிகர்தண்டா டபுள்எக்ஸ்

உண்மையை நோக்கிய ஒரு பயணம் - புணுவல் - La Voie Lactée (The Milky Way) - 1969