சாதாரணத்தன்மையின் கலை வெளிப்பாடு - Bicycle thieves- Vittorio De Sica
1
சாதாரண வாழ்க்கையை படம் பிடிக்கும் படங்கள்தான் ஆனால் அது அவர்களை மட்டுமே இல்லை, அந்த சமூகத்தையே பிரதிபலிக்கும் என்றால் அது புதுயதார்த்தவாத (Neorealism) சினிமா எனலாம். புதுயாதார்த்தவாதம் என்பதை யதார்த்தவாதத்திலிருந்து விலகி யதார்த்தத்தை சித்தரிக்க முற்படும் ஒரு கலை எனலாம்.
முசோலினியால் கட்டப்பட்ட சினிமா ஸ்டுடியோ உலகப் போரில் பாதிப்படைந்ததும், இயக்குனர்கள் குறைந்த பட்ஜெட்டில், தெருக்களில் எடுக்கப்பட வேண்டிய கட்டாயம் உருவாகிறது. அது புதுயாதார்த்தவாத சினிமாவை நோக்கித் தள்ளுகிறது. விக்டோரியோ டி சிக்கா அதில் முதன்மையான இயக்குனர்களில் ஒருவர். அதை இத்தாலியின் புதுயாதார்த்தவாதம் எனவும் கூறுவர்.
2
ரிச்சிக்கு கடைசியாக கிடைக்கும் போஸ்டர் ஒட்டும் வேலை ஒரு நிபந்தனையின் பேரில் கிடைக்கிறது. அந்த நிபந்தனை என்பது சைக்கிள் இருக்க வேண்டும். உண்மையில் அவனிடம் இல்லை. உண்மையைச் சொன்னால் வேலை கிடைக்காது, அது மட்டுமில்லாமல் பொய் சொன்னதற்க்காக அடுத்த இரண்டு வருடம் கழித்துத்தான் வேறு வேலையும் கிடைக்கும். இருப்பதைவிடவும் மனமில்லை. இருக்கிறது என பொய் சொல்லிவிட்டு வந்துவிடுகிறான். நடுத்தர ஏழை மக்களின் வாழ்க்கையை பிரதிபளிப்பது போலவே இந்த சூழ்நிலை இருக்கிறது. வயிற்றுப்பாடுதான் அது. ஏக்காலத்திலும் அவர்களால் அதனை நினைக்காமல் ஒரு நாளையும் தள்ள முடியாது. தங்களுக்கு சீராக வந்த பெட் சீட்டை அடமானமாக வைத்து சைக்கிளை வாங்குகிறான்.
சந்தோஷமாக தன் வேலையைத் தொடங்குகிறான் ரிச்சி. அப்போதுதான் தன் சைக்கிக் திருடு போகிறது. அதனை கண்டுபிடிக்க ரிச்சியும் அவரது மகனும் ஞாயிற்றுக்கிழமைகளில் ரோம் நகர் முழுவதும் சுற்றுகின்றனர். சந்தைகளில் தேடும் போது அந்த திருடனைப் பார்த்துவிடுகிறார்கள். அவன் சைக்கிளில் இருந்ததால் தப்பித்துவிடுகிறான். ஆனால் திருடனுடன் பேசிக்கொண்டிருந்த கிழவனைத் தேடி சர்ஸ்க்குள் செல்கிறார்கள். கிழவனை பலவந்தப்படுத்தி வெளியே அழைத்துக்கொண்டு செல்லும்போது, அங்கிருப்பவர்களால் ரிச்சி தடுக்கப்படுகிறான். அந்த சந்தர்ப்பதைப் பயன்படுத்திக்கொண்டு அங்கிருந்த கிழவன் தப்பிவிடுகிறான்.
கோபம் தலைக்கேற சர்ஸ்லிருந்து கிழவனைத் தேடி இருவரும் வரும் போது, சூப் சாப்பிட்டு வந்திருக்காலம் எனச் சொன்ன மகனை ரிச்சி அடித்துவிடுவான். அவன் அழுதுகொண்டு ரிச்சியுடன் வரமறுப்பான். மகனை பாலத்துக்கு அடியில் காத்திருக்கச் சொல்லிவிட்டு கிழவனைத் தேடி ரிச்சி போவான். அப்போது அங்கே ஒரு சிறுவன் தண்ணீரில் குத்துவிட்டதைக் கண்டு அது தன் மகன் தான் எனச் சொல்லி அழுதுகொண்டு ஓடுவான் ஆனால் அங்கிருப்பது வேறு சிறுவன் என்பதைக் கண்டு கொள்கிறான். அப்பாவுக்கு மகனுக்குமான அழ்ந்த உறவு படத்தில் இணையாக வந்துகொண்டிருக்கும் ஒன்று. மகனை சமாதானப்படுத்த தன் வசதிக்கு அப்பாற்ப்பட்ட உணவகத்தில் மகனுக்கு உணவுவாங்கி தருவான் ரிச்சி
பெண் சாமியாரிடம் போய் தன் சைக்கிளைப் பற்றி சொல்லவேண்டுமென கேட்டுக்கொள்வான். அது உன் முன்னால்தான் இருக்கிறது கண்களை விரித்துப்பார், இல்லை என்றால் கிடைக்காது என்று அவள் சொல்லி காணிக்கையை வாங்கிக்கொள்வாள். ஒருவரும் வெளியே வரும்போது அந்த திருடன் சாலையின் ஓரமாக போய்க்கொண்டிருப்பான். அவனை பின் தொடர்ந்து அவர்களின் வீட்டுக்குப் போய் அவனை பிடித்து சைக்கிளை தர வேண்டுமென சண்டையிட்ய்வான் ரிச்சி. அங்கிருந்த குடியிருப்புவாசிகள் அணைவரும் திருடனுக்கு சாதகமாக பேசுவதால் ரிச்சியால் எதுவும் செய்ய முடியாத நிலை. ரிச்சியின் மகன் அதற்க்குள் போலீஸைக் கூட்டிக்கொண்டு வந்துவிடுவான். போலீஸ் வீட்டைத் தேடிப்பார்க்கும் அங்கு எந்தவித தடயமும் இல்லை என்றதும், குடியிருப்பு வாசிகளின் மிரட்டல் தாங்காமல் அங்கிருந்து விலகிவருவான் ரிச்சி மகனுடன்.
கால்பந்தாட்டம் நடக்கும் விளையாட்டுதிரலுக்கு வெளியே அவர்கள் காத்திருந்தனர். ரிச்சி அமைதியில்லாமல் அங்குமிங்கும் அலைமோதுவான். த்ன் மகனிடம் காசைக்கொடுத்து டிராமில் வீட்டுக்கு போகச்சொல்லிவிட்டு அங்கிருந்த சைக்கிளை திருடுவான் ரிச்சி. அங்கிருந்த மக்கள் அவனை பிடித்து அடிப்பார்கள். ரிச்சியின் மகன் டிராமில் கூட்டமாக இருந்ததால் ஏறாமல் அடுத்த டிராமுக்காக காத்திருந்தவன் இதைப் பார்த்து, ரிச்சியின் கைகளைப் பிடித்துக்கொண்டு அழுவான். சைக்கிளின் ஓனர் போலீஸில் கம்லைண்ட் கொடுக்க வேண்டாமெனச் சொன்னதால் கூடியிருந்தவர்கள் ரிச்சியை அதிர்ச்சிட்டமான திருடன், பிழைத்துக்கொள் எனக்கத்துவார்கள். கால்பந்தட்டக்கூட்டத்தில் ரிச்சியும், அவனது கைகளைப் பிடித்தபடி அவனது மகனும் கூட்டத்தில் கரைவார்கள்.
3
பெட்சீட்களை அடகு வைக்கும் கடையில் இருக்கும் பெட் சீட் அலமாரி என்பது பிரமிக்க வைக்கும் அளவு பெரியது. அப்படியானால் ரிச்சியைப் போல சமூகத்தில் பல பேர்கள் இருக்கிறார்களா?
ரோம் நகன் முழுக்கப் சுற்றிப்பார்த்த அனுபவம் ஏற்ப்படுகிறது. வாழ்க்கையை அப்படிப் பக்கத்தில் அமர்ந்து பார்த்த அனுபவம் ஏற்ப்படுகிறது. கலை என்பதே நிகர் வாழ்க்கையை உருவாக்கி அதில் வாழவிட்டு அதன் மூலம் அனுபவங்களையும், தத்துவங்களையும், ஞானங்களையும் அடையும் முயற்ச்சிதானே. புதுயாதார்த்தவாத சினிமா என்பது புதிய உலகை படைக்காமல், இருக்கிற வாழ்க்கையை அப்படியே கண்முன் நிறுத்துவது.
தன் அப்பா கண்முன்னாலே திருட்டுச் சைக்கிளை ஓட்டிக்கொண்டு கூட்டத்திடம் தப்பிக்க முயலுவதும் பின் அவர்களிடம் மாட்டிக்கொண்டு அடிவாங்குவதும் தெரிகிறது. அது அப்பாவின் மனநிலை என்பது எப்படிப்பட்டதாக இருக்கும் கண்ணீர் சிந்துக்கொண்டு ரிச்சி நடக்கிறான். அதேசமயம் மகன் பார்வையிலிருந்து எப்படிப்பட்டதாக இருக்கும். ரிச்சியின் கைகளை இறுக்கமாகப் பிடித்துக்கொள்கிறான். அப்படி அப்பாவைப் பிடித்துக்கொள்ள அவனுக்கு சந்தர்ப்பமோ இல்லை வாய்ப்போ இல்லை மகனுக்கு.
4
ஆச்சரியப்பட இது ஒன்றுமில்லை என்றாலும், பெண் சாமியாரிடம் தன் மனைவி போகும்போது அறிவுரை கூறி அவளை அழைத்துவந்தவன். தன் சைக்கிள் காணாமல் போகும்போது மட்டும் எல்லாவற்றையும் மறந்து அவளிடம் போய் உதவி கேட்பான். தனக்கென்று நெருக்கடி இல்லாத போது கடவுள் அதன் நம்பிக்கையை பற்றி கேளி பேசுபவர்கள், அப்படி வரும்போது சரணடைந்துவிடுகிறார்கள். இந்த காலத்துக்கும் பொருந்தும் காட்சியிது. நடுத்தர மக்களின் கடவுள் நம்பிக்கை என்பது இதுதான் இப்போதும்.
பல்லாயிரம் பேர்களில் அவனும் ஒருவன். எந்தவித சிறப்பான தகுதியும் அவனுக்கு இல்லை. முதல் காட்சியில் வேலைக்காக காத்திருக்கும் கூட்டத்தில் ஒருவன் அவன், அதே போல கடைசி காட்சியில் மனவருத்தத்துடன் கூடத்துடன் கூட்டமாக கலந்து சென்றுகொண்டிருப்பவன்.
அந்த கூட்டதில் ஒருவனின் கதை, இல்லை அந்த கூட்டத்தின் கதையே தான் அது. புதுயாதார்தவாத சினிமாவின் சிறப்பு என்னவென்றால் அது சமூகத்தின் யாரோ ஒருவனைப் பற்றித்தான் பேசுகிறது. எங்கோ அது எல்லோரைப்பற்றியதுமாக மாறுகிறது







Comments
Post a Comment