உண்மையை நோக்கிய ஒரு பயணம் - புணுவல் - La Voie Lactée (The Milky Way) - 1969

1

 ஒரு பயணம் என்பது வாழ்வின் தருணங்களை மாற்றக்கூடியது.  பயணத்தில் புறமும் அகமும் ஒன்றே என காணும் சில நொடிகள் வாய்க்கும் அற்புதகணம் நிகழும். நீண்ட கடற்க்கரை, அழகிய மலைப்பகுதி என மனதில் கற்ப்பனை செய்துபாருங்கள் நான் சொல்லவருவதென்ன எனப் புரியும். 

புணுவலின் திரைவாழ்க்கை என்பது மூன்று கட்டங்கள். முதல் கட்டத்தில் dalli வுடன் சேர்ந்து மூன்று படங்களை இயக்கிய பிறகு, மெக்ஸிக்கோ சென்றுவிடுகிறார். அங்கு இயக்கிய படங்களின் கலை அம்சம் குறைவு, மறுபடியும் ஸ்பெயின்/பிரஞ்சு திரும்பிவிடுகிறார். அங்கு அவரது கடைசிகட்ட மற்றும் முக்கிய கலைப் படங்களை இயக்கி இருக்கிறார். நாம் பார்க்கும் படம் அவரது கடைசிகட்ட காலத்து முக்கிய படம். 


2

இரு பிரஞ்சு யாத்திரிகர்கள் உணவகத்தில் இருந்து  விரட்டப்பட்டதும் ஊரின் ஒதுக்குப்புறத்தில் உறங்குகிறார்கள். இடி மின்னல் கண்டு நள்ளிரவில் எழுந்து கொள்கிறார்கள். மழை பொழிகிறது. ஒரு யாத்திரிகர் மழையில் போய் நின்று கொண்டு கடவுள் இருக்கிறார் என்றால் என்மேல் இடி விழட்டும் எனச் சொல்லி ஒன்று, இரண்டு, மூன்று என எண்ணுகிறார். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை என்றதும் ஒதுக்குப்புறத்துக்கு மறுபடியும் வந்துவிடுகிறார். அப்போது அவர் நின்ற இடத்துக்கு பக்கத்தில் இருந்த குடிசையில் இடி விழுகிறது. இருவரும் ஒருகரை ஒருவர் பார்த்துக்கொள்கிறார்கள். கடவுள் இருக்கிறா இல்லையா என்பதுதான் இந்த படம் எழுப்பும் அடிப்படை கேள்வி. இவர்களின் பயணம் பிரஞ்சிலிருந்து ஸ்பெயினில் உள்ள புனித தலத்திற்க்கு செல்வதுதான் படம். அந்த பாதை காலங்காலமாக யாத்திரிகர்கள் பயணிக்கும் வழி, அதற்க்குச் சிறப்பு பெயர்தான் Milky Way. முதலில் ஒரு வழிப்போக்கனை சந்திக்கிறார்கள். அவன் ஒரு விபச்சாரியுடன் உறவுகொண்டு பிள்ளை பெற்றுக்கொள்ளுங்கள் என்று சொல்லி கைகளில் பணத்தைக் கொடுத்துவிட்டு செல்கிறார்.  



யாத்திரிகர்கள் ஒரு உறைவிடப் பள்ளியில் இளைப்பார ஒதுங்குகின்றனர். மதம் பற்றிய நிகழ்ச்சிகளை குழந்தைகள் வழங்கிக்கொண்டிருக்கும் போது அந்த யாத்திரிகரில் ஒருவர், போப்பை புரட்சிக்காரர்கள் சுட்டுக்கொள்வதைப் போல மனதுக்குள் நினைக்கிறார். ஒரு பக்கம் மதங்களைப் பற்றிய நம்பிக்கையை கொடுத்துக்கொண்டிருக்கும் போது மறுபக்கம் சந்தேகங்களை கிளப்பிக்கொண்டே இருக்கும் ஆட்களும் இருக்கவே செய்கிறார்கள். சொன்னதை திரும்பிப் பெற்றுக்கொண்டால் நீ சாவிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம் என Father சொல்லுகிறார். மதவெறியன் அதை ஒத்துக்கொள்ளாததால் அவனை எறிக்க ஆணை இடுகிறார். அப்போது அங்கிருந்த இளம் பாதிரியார், ஒருவரைக் கொல்வது என்பது கிருஸ்துவுக்கு எதிரானதாக ஆகாத என வினவுகிறார். இது மதசார்பற்ற நீதி எனச்சொல்லி சமாளிக்க முயலுகிறார் Father. இந்த சந்தேகம்தான் வழி முழுக்கவே இருந்துகொண்டிருக்கிறது. 



கடவுள் திரித்துவம் (trinity) என நம்புகிறார்கள். ஆனால் இரு ஆண்கள் அதில் நம்பிக்கை இல்லை எனச் சொல்லி  பாதிரியாரிடம் கத்திவிட்டு அங்கிருந்து ஓடிவிடுகிறார்கள். புனித மேரி இல்லை என்பது அவர்களின் வாதம். காட்டிற்க்குள் சென்ற அவர்கள் வேட்டையாடிகளின் உடையையும் உடைமைகளையும் எடுத்துக்கொள்கிறார்கள். ஜெபமாலை ஒன்று அவர்களது பாக்கெட்டில் இருக்கிறது. அதை தூக்கி மரக்கிளையில் போட்டு துப்பாக்கியால் சுடுகிறான். இரவானதும் அவனுக்கு மட்டும் புனித மேரி காட்சி தருகிறாள். அவன் கூட இருப்பவனால் புனித மேரியைக் காணமுடியவில்லை. புனித மேரி அந்த ஜெபமாலையை திருப்பி சுட்டவனிடமே தருகிறாள். தான் வாங்கியக் கொண்ட அந்த ஜெபமாலையை உணவகத்துக்கு சென்ற பிறகு அங்கிருக்கும் பாதிரியிடம் சொல்ல அவரும் புனித மேரியின் அற்புதங்களைச் சொல்லுகிறார். அந்த இரு ஆண்களிடம் கழுதையைப் பற்றிச் சொல்லிவிட்டு இரவோடு இரவாக யாத்திரிகர்கள் அந்த உணவகத்தைவிட்டு வெளியேறுகின்றனர். 


யாத்திரிகர்கள் கடைசியாக ஸ்பெயின் வந்து சேர்ந்ததும் அங்கிருந்த விபச்சாரி இவர்களை தன் பக்கம் அழைத்து, தனக்கு குழந்தை கொடுக்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறாள். இரு யாத்திரியர்களும் அவளுடன் காட்டிற்க்குள் ஒதுங்குகிறார்கள். படத்தின் முதல் காட்சியில் வழிப்போக்கன் சொன்னது போலவே நடந்தது.  படத்தின் கடைசி காட்சிகளில் யேசு கண்பார்வை இழந்த இருவரை குணப்படுத்துகிறார். ஆனால் அவர்களுக்கு வழக்கமாக மனித கண்களுக்கு தெரியும் காட்சிகள் தெரியவில்லை. யேசுவை பின் தொடர்ந்து செல்கிறார்கள். ஒரு குழி அவர்கள் செல்லும் பாதையில் இருக்கிறது. கண்பார்வை வந்த ஒருவர் அதைக் கடந்துவிடுகிறார் மற்றவரோ அங்கே குழிகளை தூளாவிக்கொண்டு தேங்கிவிடுகிறார். 





3

படத்தின் காட்சிகள் வேவேறு காலங்களில் (வரலாற்று காலம் முதல் தற்போதைய நாட்கள் வரை),  பல இடங்களில் நடக்கிறது. கதை என்றால் நாம் நினைத்துக்கொண்டிருப்பதைப் போல நாயகன், வில்லன், போரட்டம், வெற்றி/தோல்வி என இல்லை. இது ஒருவகை ஹாலிவுட் சூத்திரம். முக்கியமாக கதையில் தொடர்ச்சி (continuity) என்பது கிடையாது. உண்மையில் அப்படி நிஜவாழ்க்கையிலும் கிடையாது. நம்மால் அப்படிப்பட்ட ஒழுங்கில்தான் வாழமுடியுமென வலிந்துகட்டிக்கொண்டு அப்படி ஒரு தொடர்ச்சியை வரலாற்றிலும் நிகர் வாழக்கையிலும் உருவாக்கிகொண்டிருக்கிறோம். அப்படி பார்க்கும் போது இந்த படம் குழப்பமான படம் என்றுதான் சொல்ல வேண்டிவரும்.

உண்மையில் அப்படியா என்றால் இல்லை. புணுவல் படங்கள் என்பவை மீபெருண்மை (surrealism) அழகியலைச் சார்ந்தவை. அந்த அழகியலுக்கு தர்க்கம் என்பது முக்கியமில்லை. கலையின் மதிப்பு தான் முக்கியம். அவ்வகையில் இப்படம் பல அதிசியங்களை கொடுக்கிறது. யேசு தோற்றத்திலிருந்து, டூயல் சண்டைகளின் வழியே தற்க்கால வாழ்க்கைவரை படம் நகர்கிறது. ஆனால் அவருக்கு இடையேயான தொடர்ச்சி இல்லை. 

இவரது படகளில் மூன்று முக்கிய போக்குகளை காணாலாம். மத நிறுவனங்களை எதிர்க்கும் போக்கு, அடக்கப்பட்ட காமத்தின் பீறிடல் மற்றும் யதார்த்தையும் அதன் ஒருங்கினைவையும் மறுக்கும் பார்வை. இந்த படத்தில் மத நிறுவனங்களின் மீதான அவநம்பிக்கை மற்றும் அதனை எதிர்க்கும் காட்சிகள்  முழுக்க இருக்கிறது என்றாலும் கடவுள் இருப்பதாக சில அதிசியங்களையும் படம் காட்டுகிறது. இடிவிழுதல், புனித மேரியின் காட்சியளித்தல் போன்றவை. 


4

கலையின் முக்கிய நோக்கம் அறிதலே. சில காட்சிகளை மட்டும் இங்கு சுட்டிக்காடுகிறேன். யாத்திரிகள் புனித தலங்களுக்கு பாதயாத்திரிகை செல்லுதல், இடிவிழும் காட்சி, போப்பை சுட்டுக்கொல்லும் கனவுக்காட்சி, புனித மேரி காட்சியளித்தல், யாத்திரியர்கள் விபச்சாரியுடன் செல்லுதல். 



அவரது முந்தைய படங்களைப் போலவே இதிலும் படிமங்கள் நிறைய இருக்கின்றன. உதாரணமாக அந்த பள்ளம். குருடர்களை குணமாக்கியபிறகு அவர்கள் யேசுவை பின்தொடர்ந்து செல்கிறார்கள். ஒருவன் மட்டுமே அந்த பள்ளத்தை தாண்ட முடிகிறது, மற்றவன் அங்கேயே தேங்கி நின்றுவிடுகிறான்.  பள்ளம் என்பது இந்த உலகின் மாயம். அதில் மாட்டியவர்கள் தப்பிக்க முடியாமல் தவிக்கிறார்கள். இந்த மானுடர்களுக்கு ஒளி கொடுத்த இறைவன் மேல் தப்பில்லை,  பார்வையை பெற்ற மனிதர்கள்தான். 

Movie Link  http://www.christiebooks.com/rave/mp4/Sp%20%20The%20Milky%20Way%20(1969)%20Luis%20Buuel.mp4?_=1 



Comments

Popular posts from this blog

Movie Review- ஜிகர்தண்டா டபுள்எக்ஸ்

புனுவலின் மீமெய்யியல் - Un Chien andalou (An Andalusian Dog) -1920