Posts

Showing posts from July, 2021

Angle of sin - தேவதையின் தன்மீட்சி - Robert Bresson

Image
 1 கிளாஸிக் படைப்புக்கள் எப்போதும் இலட்சியவாதம் நோக்கித்தான் பேசும். அப்படிப்பட்ட ஒரு படைப்புத்தான் Angle of sin. இது ஒருவகை தன்மீட்சிக் கதை என்றே சொல்லலாம். minimalist style சினிமாவின் வலுவான தொடக்கம் எனவும் சொல்லலாம். இயக்குநர் Bresson முதல் படம். 1943 ல் வெளிவந்துள்ளது. டால்ஸ்டாய்ன் புத்துயிர்ப்பு நாவல் போன்ற கதை இது எனலாம். தன்னறம் என்பது கன்னியாஸ்திரியாகி சேவை செய்வதே என உணர்ந்து கன்னியாஸ்திரி மடத்திற்க்கு வரும் அன்னே மேரி, தான் செய்யாத திருட்டுக் குற்றத்திற்க்காக சிறையில் அடைபட்ட மரியாவைப் பார்த்து அவளை திருத்தி மகிழ்ச்சியான பாதைக்கு அழைத்துச் செல்ல முயலுவதே கதை.  கண்ணுக்கு கண் என்பது பழமொழி. ஒரு கண்ணத்தில் அடித்தால் மறுகண்னத்தைக் காட்டு என்பது பைபிளின் வாசகம். முதலாவது வாசகம் மனித மனதின் ஆழ் உள்ளத்தை காட்டும் படம். இரண்டாவது இலட்சியவாதத்தின் வாசகம், நேர் மறையானது. மனிதன் இயல்பிலே எதிர்மறையானவன். மரியா முதல் வாசகத்திற்க்கும், மேரி இரண்டாவது வாசகத்திற்க்கும் உரியவர்கள். இவ்விருவரின் முரண்பாடுகள் நமக்கு பலவித கேள்விகளை எழுப்புகிறது. 2.  மேரி மிகுந்த உற்சாகமானவளாக இருக...