Movie Review- ஜிகர்தண்டா டபுள்எக்ஸ்


காணிக்காரன் கையில் முரசு:

இந்த படத்தின் முக்கியமான காட்சி என்பது முரசுடன் காட்டுவாசிகள் ஒருபுறம் வரிசையாக நிற்க்க மறுபுறம் காவலர்கள் கையில் துப்பாக்கியுடன் நிற்க்கிறார்கள். காணிக்காரன் முரசுடன்தான் நிற்க்கமுடியும். இது எல்லா நாடுகளிலும் இருக்கும் முக்கியமான பிரச்சனை. காட்டுவாசிகளை தங்கள் இருப்பிடம்விட்டு நகர்த்தி நவீனத்தை காடுகளில் புகுத்த முயலும் பணமுதலைகள்/அரசியல்வாதிகள்/தொழில் அதிபர்கள். காடுகளை அழிக்கும் போது அதற்க்கு முதன்மைத் தடையாக இருப்பது இவர்கள் தான். காடுகளை அழிவது முதன்மையாக இவர்கள் வாழ்வாரத்தை அழிக்கும், தொடர்ந்து காட்டு விலங்குகள் தன் இருப்பிடத்தைவிட்டு கிராமங்களுக்குள் புகும். அதனை அவர்கள் எப்படி எதிர் கொள்கிறார்கள் என்பது மிகப்பெரிய வினா. உண்மையில் அப்படி எவராலும் எதிர்கொள்ள முடியாது என்பதே உண்மை. காரணம் அவர்கள் யாரை எதிர்த்து நிற்க்கிறார்கள் என்றால்? அது மனிதனின் பேராசையை. அந்த பேராசை பணமுதலைகள்/அரசியல்வாதிகள்/தொழில் அதிபர்கள் ரூபத்தில் நம் முன் நிற்க்கிறது. விந்தை என்னவென்றால் தனக்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவர்கள் கெட்டவர்கள் என்று நினைத்து நாம் ஆறுதலடைந்துகொள்ளலாம். ஆனால் உண்மை என்னவோ ஆன்லன் ரம்மி விளையாடி பணக்காரனாகலாம் என நினைக்கும் அந்த பேராசை என்றால் என்ன நினைப்பது? அதுதானே பணமுதலைகள் மனதிலும் சற்று பெரிதாக இருக்கிறது. மனதை ஆற்றிக்கொள்ள வேண்டுமானால் என்னது அளவில் சின்னது எனச் சொல்லிக்கொள்ளலாம். சுவாரஸ்யமான விஷயம் என்பது காட்டுவாசிகள் எப்படி அதிகாரத்தை எதிர்கொள்கிறார்கள் என்பது. ஒருபக்கம் துப்பாக்கிச் சத்தம் அதற்க்கு எதிராக முரசின் சத்தம். என்ன ஒரு முரண்? நிச்சயம் இந்திய சினிமாவில் எடுக்கப்பட்ட மிக முக்கிய காட்சிகள் ஒன்று.

என்னுடைய எண்ணத்தில் படம் இந்தக் காட்சியுடன் முடித்திருக்க வேண்டும். இலக்கியத்தில் வாசக இடைவெளி என்று இதனைச் சொல்லுவார்கள். அப்படி என்றால் எல்லாவற்றையும் ஆசிரியனே ஊட்டிவிடாமல் வாசகன் யோசித்து, கற்ப்பனை செய்து, உள்ளுணர்வால் கண்டு அந்த இடைவெளியை நிரப்ப வேண்டும். தவறாக இதனை விடுகதை அல்லது குறுக்கெழுத்துப் போட்டி என்று நினைத்துவிட வேண்டாம். ஆசிரியனுக்கு நிகராக படைப்பை உருவாக்க ஆசிரியன் அழிக்கும் வாய்ப்பு. துப்பாக்கிச் சத்ததுக்கு எதிராக முரசின் சத்தம் போதும் பார்வையாளனுக்கு அதனை உணர்த்த.  இன்னொரு முக்கியமான இடம் ஒரு காவலர் கேட்ப்பார், நா எப்படி கொல்றது? அவங்க எதிக்க மாண்டங்கறாங்கலே? அ ந்த முரசுச் சத்தம் ஏற்ப்படுத்தும் மாற்றமது. பின்னால் வந்த காட்சிகள் பார்வையாளனுக்கு முற்றிலும் செய்யப்பட்ட அநீதி என்றுதான் சொல்லுவேன். 

கலைகள் ஏற்ப்படுத்தும் பாதிப்பு:

கலைகள் மனித சமூகத்தில் ஏற்ப்படுத்தும் பாதிப்பு என்ன? அநீதிக்கு எதிராக அவர்களை போரடத் தூண்டுமா? அப்படியானால் எந்த கலைக்காக சமீபத்தில் மக்கள் சாலையில் இறங்கி போராடி அதனை மாற்றினார்கள் அப்படி எதும் உடனடியாக நினைவுக்கு வரவில்லை இல்லையா? அப்படியானால் கலைகளினால் அப்படி எதும் நடந்துவிடாத என்று எண்ணத் தோன்றுகிறது. நிச்சயம் கலைகளினால் அப்படியான பாதிப்பு இருக்கிறது ஆனால் அது மறைமுகமானது. 

உதாரணமாக "அரசியல் பிழைத்தொருக்கு அறம் கூற்றாகும்" என இளங்கோவடிகள் சொல்லி அதனை நிறுவிய பின் அரசன் என்பவன் எப்படிப் பட்டவனாக இருக்க வேண்டும் என்ற கனவை தமிழ் சமூகம் முன் வைக்கிறார். எல்லோருக்கும் தெரிந்திருக்கும் அந்த காலகட்டம் எப்படிப்பட்டது, மன்னர்கள் என்ன செய்தார்கள் என? இவை மனித சமூகத்தின் மதிப்புகள் மேல் கேள்விகளை எழுப்பிக்கொண்டு இருக்கிறது. கலை தொடர்ந்து பழைய மதிப்புக்கள் மேல் விமர்சனமும் புதிய மதிப்புக்களையும் உருவாக்கிக்கொண்டு இருக்கிறது. சமீபத்திய உதாரணம் ஜெயகாந்தன் எழுதி சமூகத்தின் மேல் ஏற்ப்படுத்திய பயங்கரமான பாதிப்பு "அக்கின் பிரவேசம்".

இந்தப் படத்தில் கிட்டத்தட்ட கோர்ட்டில் சாட்சி சொல்லவரும் ஒரு மனிதனுக்கு இணையாக கலையை காட்டி இருப்பார்கள். அப்படி எந்த கலையும் செயல்பட முடியாது. கலையில் நோக்கம் என்பதே சமூக மதிப்புகளை மறுபதிப்பு செய்யத்தானே ஒழிய சாட்சி சொல்ல அல்ல. 

கலைஞன் கலையை கண்டுகொள்ளுதல்:


எப்படி ஒரு கலைஞன் கலையை கண்டுகொள்வான்? தன்னை எழுத்தாளன் என எப்படி ஒருவன் கண்டு கொள்வது? எழுதிப் பார்த்துதான் என ஜெயமோகன் சொல்லுவார். அதைப் போல ஒருவன் தன்னை இயக்குனர் என கண்டுகொள்கிறான். இது மிக முக்கியமான ஒரு கோணம் என்றாலும் கதையாசிரியர் இதைனை மேலோட்டமாக வைத்திருக்கிறார்.  ஒரு கலைஞனின் உள்போரட்டம் என்பது இங்கு சொல்லபடவே இல்லை. வெறுமனே கதைக்காக அப்படி அவன் மாறியிருக்கிறான் என்றுதான் தோன்றுகிறது. உண்மையில் தன்னை இயக்குனராக உணரும் தருணம் என்பது என்ன? தெரியவில்லை. கதையில் அப்படியொரு மாற்றம் இருப்பதால் அதனைப் பற்றி பேச வேண்டியிருக்கிறது. உதாரணமாக Bi cycle thief படத்தில் ஒரு அப்பா/தொழிலாளி/கணவன் எப்படி திருடனான் என்பது வெளி உலகின் மூலம் அவனது மனம் உணர்த்தப்பட்டிருக்கும். அந்த மலைகிராமம் சாவதை படம் பிடிக்கும் போது தன்னை உணர்ந்தான் எனச் சொல்லிக்கொள்ள சிலர் முனையலாம். திரும்பவும் கலை என்பதன் நோக்கம் பற்றி படித்துவிட்டும் அப்படி யோசித்தால் சொல்லுவதற்க்கொன்றும் இல்லை. 


யானைக்கு மனிதனுக்குமான சண்டை:


முக்கியமாக கவனிக்க வேண்டிய உறவு என்பது யானைக்கும் ஷெட்டானிக்குமானது மற்றது யானைக்கும் நாயகனின் மாமாவுக்குமானது. முன்னது யானையை வேட்டையாடிக் கொன்று அதன் மூலம் காசு பார்ப்பது. இரண்டாவது யானையை கடவுளாகப் பார்க்கும் பழங்குடிப் பார்வை. இயற்க்கையை கடவுளாகப் பார்த்தால் அது யானையாகத் தான் இருக்கும் என்பது அந்தப் பார்வை. ஒருவகையில் மாமா தன்னை மனித்த யானையை கட்டிக்கொண்டு அழுகிறார். இன்னொரு வகையில் பார்த்தல் தன் உயிரை அதற்க்காகவே வைத்துக்கொண்டிருக்கிறார் எனத் தோன்றுகிறது. தன் பாவங்கள் மனித்துக்கொள்ளப்பட்டதை எண்ணி மகிழ்கிறார். விவ்சாயம் செய்வோர்கள் முதலில் மண்ணை நோக்கி தன் வேண்டுதல்களை இவ்வாறு வைப்பார்கள். மண்னை நான் கலங்கப்படுத்துகிறேன் அதற்க்காக என்னை மனிப்பாய்யாக என. வானம் அப்பாவின் நிலையிலும் மண்ணை அம்மாவின் நிலையிலும் கொண்டு, மண்ணிலிருந்து வரும் பயிர்கள் பூமித்தாய் அழிக்கும் வரம் அல்லது குழந்தை எனக்கொள்ளலாம்.  அது போல தாங்கள் செய்த தவறுகளுக்கு யானையிடம் வேண்டிக்கொள்கிறார் மாமா.

இந்த இரு பார்வைக்குமான போரட்டம் தான் இந்தப் படம். காடு நமக்கு மரங்கள் தரும் என பள்ளிக்கூடத்தில் படித்திருந்த நினைவு சிலருக்கு இருக்கலாம். அப்படியானால் காட்டைப் பற்றிய பார்வை என்ன? உங்கள் பார்வை என்ன? நல்வாய்ப்பாய் காட்டைப் பற்றிய பாடத்தை மாற்றிவிட்டார்கள். 

வரலாறு:


தமிழ்நாட்டில் உண்மைய உண்மையாக படம் எடுக்க முடியாது என்று தெரியும். இருந்தும் ஒரு நல்ல படம் என்று சொல்லும் போது சில நியதிகள் அதற்க்கு உண்டு.
1. வரலாற்றை மாற்றிச் சொல்ல யாருக்கும் உரிமையில்லை. ஆனால் வரலாற்று இடைவெளியை கற்ப்பனையால் நிரப்ப கலைஞனுக்கு முழு உரிமையுள்ளது. உதாரணமாக தஞ்சை பெரிய கோவிலைக் கட்டியவன் பாண்டிய மன்னன் என்று பொய் சொல்ல முடியாது. 
2. அரசியலைப் பற்றி பேசும் போது நான்கு கூறுகள் தான் ஒரு கட்சி ஆட்சியைப் பிடிக்க முடியும் என்பது தின்னம்
       1. கட்சியின் சித்தாந்தம்
       2. அதன் திட்டங்கள்
       3. பணம் அல்லது ஆட்கள் பலம்

       4. மக்களை அடிப்படையிலிருந்து மாற்றம் செய்வது. (உ.தா. காந்தி)

சில அடியாட்களின் துணையோடு ஒருவர் முதலமைச்சராக முயலுவதும் அந்த ரவுடிகளைக் கொன்றால் தான் முதலமைச்சர் ஆகிவிடலாம் என நினைப்பதும். என்ன ஒரு அறியாமை. தற்கால உதாரணத்தையே எடுத்துப் பாருங்கள். ஆளும் கட்சியில் அப்படி செய்தா முதலமைச்சர் ஆனார்?

ரசனை குறைபாடு:


பாடத்திற்க்கு காசு கொடுத்து பார்ப்பது எதற்க்காக? அந்த இயக்குனர் ஒரு உலகை உருவாக்கி அதில் நமக்கு நிகர் அனுபவத்தை தருவதற்க்காக. ஒருவேளை இயக்குனர் ஏற்க்கனவே உருவாக்கப்பட்ட உலகை நமக்கு காட்டினால் எப்படி இருக்கும்? அதுதான் spaghetti Westerns genere ல் மதுரையைக் காட்டி இருப்பது. அது ஏற்க்கனவே Hollywood ல் உருவாக்கப்பட்ட ஒரு மாதிரி. எடுத்து எடுத்து தேய்ந்து போய் அவர்களே விட்டுவிட்டார்கள். ஒன்று அதிலிருந்து நாம் என்ன வித்தியாசமான காட்சிகளை உருவாக்கி இருக்கிறோம்? இல்லை நமக்கான மாதிரியை நாமே உருவாக்கி இருக்க வேண்டும். என்னதான் இருந்தாலும் இது ஒருபடி கீழே வைத்துப்பார்க்க வேண்டிய கட்டாயமாகிறது. 

உதாரணமாக மதுரைக் காட்சிகளுக்கும் காட்டின் காட்சிகளையும் ஒப்பிட்டுப்பார்த்தால் புரியும். இரண்டு காட்சிகள் மட்டுமே முக்கியமாக இருக்கிறது. 
1. யானை பனிமூட்டத்திற்க்கு இடையே இருந்து தோன்றும் காட்சி.
2. காவலர்கள் சாரை சாரையாக சுடுவதற்க்காக மேலே ஏறிவரும் காட்சி

மற்ற காட்சிகள் எல்லாம் ஏமாற்றம் தான். ஆனால் மதுரைக் காட்சிகள் அட்டகாசமாக இருக்கிறது. Aesthetic sense இருக்கும் ஒருவர் இதனை கவனித்திருப்பார். எது சிறந்த காட்சி அனுபவத்தை தந்த ஒன்று காட்டைப் பற்றிக் காட்டும் போது மட்டும் இல்லமல் ஆனது. பார்வையாளனுக்கு இந்த வேறுபாடு புரியும் போது நான் மேலே சொன்ன ஒரு படி என்பதை ஏற்றுக்கொள்வார்கள் என நினைக்கிறேன். 





Comments

Popular posts from this blog

உண்மையை நோக்கிய ஒரு பயணம் - புணுவல் - La Voie Lactée (The Milky Way) - 1969

புனுவலின் மீமெய்யியல் - Un Chien andalou (An Andalusian Dog) -1920