கலை - ஒரு இலட்சியத்திற்கான ஏக்கம் -பகுதி 1
இது தர்கோவ்ஸ்கி எழுதிய கட்டுரையின் தமிழாக்கம். (Sculpting in time - Book)
கலையின் இறுதி நோக்கம் என்னவென்பதை வரையறுப்பது முக்கியமென நான் நினைக்கிறேன். சினிமா இயல்பின் கலை பற்றிய பிரச்சனையை பிறகு பார்ப்போம். கலை ஏன் இருக்கிறது? யாருக்கு இது தேவை? உண்மையிலே யாருக்கு இது தேவை? இந்த மாதிரியான கேள்விகள் கவிஞர்கள் மட்டுமில்லாமல் உண்மையிலேயே கலையைப் பாராட்டக்கூடியவர்களாலும் கேட்க்கப்படுகிறது. இருபதாம் நூற்றாண்டில் கலைக்கும் அதன் பார்வையாளனுக்கும் இடையே இருக்கும் உறவு என்பது நுகர்வோர் என்ற அளவிலே இருக்கிறது.
நிறைய பேர்வழிகள் தனக்குத்தானே இந்த கேள்விகளை கேட்டுக்கொள்கிறனர். ஏதோ ஒருவகையில் கலையுடன் தொடர்புடையவர்கள் அதற்க்கென தனக்கான பிரித்தியேக பதில்களை வைத்திருக்கின்றனர். அலெக்சாண்டர் பிளாக் இவ்வாறு சொல்கிறார், கவிஞன் குழப்பத்திலிருந்து நல்லிணக்கத்தை உருவாக்குகிறான். புஸ்கின் கவிஞர்களுக்கு தீர்க்கதரிசனத்தின் பரிசு இருந்தது என நம்புகிறார். ஒவ்வொரு கலைஞனும் தனது சொந்த சட்டங்களால் ஆளப்படுகிறான். ஆனால் இது வேறு யாருக்கும் கட்டாயமானது இல்லை.
எந்த ஒரு சந்தரப்பத்திலும் கலையின் குறிக்கோள் என்பது மனிதன் எதற்க்காக வாழ்கிறான், அவனது இருப்பின் பொருள் என்ன? என்பதை கலைஞனுக்கும், அவனைச் சுற்றி இருப்பவருக்கும் விளக்குவது. மக்களுக்கு அவர்கள் இந்த கிரகத்தில் தோன்றியதற்க்கான காரணம் என்ன என்பதை விளக்குவதற்க்கும். ஒருவேளை அப்படி விளக்க முடியவில்லை என்றால், குறைந்தது அப்படி ஒரு கேள்வியையாவது எழுப்ப முயற்சிப்பது கலையின் வேலையாகும். சந்தையில் விற்கக்கூடிய பண்டத்தைப் போல நுகர்வோரை குறிக்கோளாக கலையில் வைத்துக்கொள்ள முடியாது என நம்புகிறேன்.
கலையின் பங்கு என்பது அறிந்துகொள்ளுதலே என்று சொல்வது மதிப்புடையதாக இருக்கும். பொதுமைப்படுத்திச் சொல்ல வேண்டுமானால் இப்படிச் சொல்லிக்கொள்ளலாம். இதன் விளைவு அதிர்ச்சியாகவும், ஆழ்ந்த உணர்ச்சி தூய்மையானதாகவும் வெளிப்படுகிறது.
அறிவின் மரத்திலிருந்து ஏவாள் ஆப்பிளைச் சாப்பிட்ட அந்த கணத்திலிருந்து, மனித குலம் இடைவிடாது முயற்சி செய்து சத்தியத்திற்க்க்காக அழிந்தது. முதலில் நமக்கெல்லாம் தெரிந்த ஏதாம் மற்றும் ஆதாம் தாங்கள் நிர்வாணமாக இருப்பதை கண்டுபிடித்தார்கள். பிறகு அதைப்பற்றி வெட்க்கப்பட்டார்கள். அவர்கள் வெட்க்கப்பட காரணம், அவர்கள் அதனை உணர்ந்துகொண்டார்கள். பிறகு அவர்களாகவே தங்கள் வழியின் மூலம் ஒருவரையொருவர் அறிந்துகொள்ளும் மகிழ்ச்சியை அமைத்துக்கொண்டனர். அது பயணத்தின் ஒரு நல்ல தொடக்கமாக அமைந்தது. அந்த இரண்டு ஆத்மாக்களுக்கும் எப்படி அந்த கணம் வியக்கதக்கதாக இருந்திருக்கும் என்பதை ஒருவர் நிச்சயம் புரிந்துகொள்ள முடியும். அந்த அறியாமையின் நிலையிலிருந்து அப்போதுதான் வெளிப்பட்டதும், பூமியின் பரந்த தன்மைக்கும், விரோத மற்றும் விவரிக்க முடியாததுக்கும் விசிரியடிக்கப்படனர். இந்த வளர்ச்சிக்கு பரிணாமம் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
மனிதனின் உதவியுடன் படைப்பாளி தன்னை அறிந்துகொள்கிறான். இது வேதனையான செயல்முறையின் மனித ஆத்ம ஞானத்துடன் இணைந்துள்ளது. ஒரு உணமையான அர்த்தத்தில் ஒவ்வொரு தனி நபரும் வாழ்க்கையை, தன்னை, தனது நோக்கங்களை அறிந்துகொள்ளும் போது இந்த செயல்முறையை அனுபவிக்கிறார்கள். நிச்சயமான ஒவ்வொரு மனிதனும் மனித குலத்தால் திரட்டப்பட்ட அறிவின் தொகையை உபயோகிக்கிறார்கள். ஒவ்வொரு மனிதனுக்கும் வாழ்க்கையின் குறிக்கோள் என்பது ஒரே மாதிரியான அறம், தார்மீக ஆத்ம ஞான அனுபவம் மட்டுமே. அகவயமாக, இது ஒவ்வொரு முறையும் புதிதாக உணரப்படுகிறது. தனக்கு வெளியே இருக்கும் இலட்சியத்துடன் இணைந்துகொள்ள வேண்டும் என்ற ஏக்கத்துடன், மீண்டும் மீண்டும் மனிதகுலம் தன்னை இந்த உலகத்துடன் தொடர்புபடுத்துகிறது. இது ஒருவிதமாக உள்ளுணர்வால் உணர்ந்த முதல் கொள்கை. மனித குலத்தின் அதிருப்தி மற்றும் வலிக்கான நிரந்தர ஆதாரமாக இருப்பது அந்த ஒன்றாக மாறுவதற்க்கான இயலாமையே, அது அவனது போதாமையின் விளைவு.
கலை என்பது அறிவியலைப் போல உலகை ஒருங்கிணைக்கும் ஒரு வழி, அதுமட்டும் இல்லாமல் முழுமையான உண்மையை (Absolute Truth) நோக்கிய மனிதனின் பயணத்திற்க்கு அது ஒரு கருவியும் கூட. கற்ப்பனைமிகு மனித ஆத்மாவின் இரண்டு உருவகங்களுக்கு இடையேயான ஒற்றுமை முடிவுக்கு வருகிறது எனினும் இதில் மனிதன் வெறுமனே கண்டுபிடிக்கப்படவில்லை, ஆனால் உருவாக்கிறான்.
தர்க்கம் மற்றும் கலை என்ற இந்த இரு அறிதல் முறைகளுக்கு இடையேயான வேறுபட்ட கொள்கைகளும், அதிக வேறுபாட்டையும் இப்போதைக்கு கவனிக்க வேண்டும். கலைகளின் மூலம், மனிதன் அகநிலை அனுபவத்தின் (Subjective experience) வழியே அதிக யதார்த்தத்தை எடுத்துக்கொள்கிறான். அறிவியலில் உலகத்தைப் பற்றிய மனிதனின் அறிவு என்பது அறிவியலின் வழியே முடிவில்லாத படிக்கட்டுகளை உருவாக்குகிறது, எப்படி என்றால் தொடர்ந்து புதிய கண்டுபிடிப்புக்கள், பழையதை மாற்றம் செய்வதன் வழியே, புறநிலை உண்மையின் பொருட்டு, ஒரு கண்டுபிடிப்பு அடிக்கடி பொய்யானதான மற்றொரு கண்டுபிடிப்பால் நிரூபிக்கப்படுகிறது. கலைஞன் ஒவ்வொரு முறையும் உலகத்தின் புதிய மற்றும் தனித்துவமான உருவகத்தை கண்டுபிடிக்கிறான், ஒரு சத்தியத்தின் உண்மை (Absolute Truth). இந்த உலகத்தின் அழகும் அசிங்கமும், இரக்கமும் கொடுமையும், முடிவிலியும் எல்லையையுமான இந்த உலகத்தின் எல்லா சட்டங்களையும் ஒரே அடியில் என் உள்ளுணர்வால் உள்வாங்கிக்கொள்ளும் தற்காலியமான உள்ளார்ந்த ஆசை, இது ஒரு வெளிப்பாடாகத் தெரிகிறது. கலைஞன் இதனை ஒரு படிமமாக (Image) உருவாக்குகிறான் அது முழுமையான கண்டுபிடிப்பு. படிமம் மூலம் தொடர்ந்து முடிவிலியை பற்றிய விழிப்புணர்வு ஏற்ப்படுத்துகிறது. வரையறுக்கப்பட்டவரிலிருந்து நித்தியத்திற்க்கு (eternal), பொருட்க்களிலிருந்து ஆன்மிகத்திற்க்கு, வரம்பற்றதாக கொடுக்கப்பட்ட வடிவம்.
கலை என்பதை பிரபஞ்சத்தின் குறியீடு என்று சொல்லலாம். அதனுடன் இணைந்துள்ள ஆன்மிக உண்மை நம்முடையை நேர்மறையான, நடைமுறை செயல்பாடுகளில் ஒழிந்துள்ளது.
விஞ்ஞான அமைப்பில் ஈடுபடுவதற்க்கு எந்தவொரு தனிமனிதனும் அவனாகவே தர்க்கப்பூர்வமான சிந்தனை செயல்முறையை புரிந்துகொள்ள வேண்டும். இதனை ஆரம்பிக்கும் புள்ளியாக ஒருவகைக கல்வி முறை தேவைப்படுகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக, ஒரு உணர்வை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையில், ஒரு உணர்ச்சி அதிர்ச்சியின் காரணமாக இருப்பது மற்றும் ஏற்றுக்கொள்ளப்படுவது, மக்களை வெல்லமுடியாத பகுத்தறிவு வாதத்தால் அல்ல, ஆனால் கலைஞர் சேர்த்த ஆன்மீக ஆற்றல் மூலம் கலை அனைவருடனும் உரையாற்றுகிறது. அது கோரும் ஆயத்த ஒழுக்கம் ஒரு அறிவியல் கல்வி அல்ல, ஆனால் ஒரு குறிப்பிட்ட ஆன்மீக பாடம்.
.

Comments
Post a Comment