shoeshine - மனிதனின் அவநம்பிக்கையும், நாகரிக சமூகத்தின் குற்றவாளிகளும் - Vittorio De Sica

 1

ஒரு சமூகம் கைவிடப்பட்ட சிறுவர்களை எப்படி நடத்துகிறது? அவர்கள் கொலைகாரர்களாக, திருடர்களாக பின்னாலில் மாறும்போது அவர்களுக்கு தண்டனை வாங்கிக்கொடுப்பதோடு நாம் ஆறுதல் அடைந்துகொள்கிறோம். கைவிடப்பட்ட சிறுவர்களை சமூக விரோதிகளாக மாற்றும் இந்த சமூகம் எந்தவிதமான தண்டனையையும் ஏற்றுக்கொள்வதில்லை.  சிறைதண்டனையை அனுபவிக்கும் அவர்களை நாம் என்ன விதமாக நடத்துகிறோம்? திருந்துவதற்க்கான வாய்ப்பா? இல்லை பழிக்குப் பழி வாங்கவா (ஒருவனை கொன்றுவிட்டான் என்பதற்க்காக அவனை தூக்கில் போட்டு அவனை கொன்றுவிடலாமா?) மனிதனின் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியாத மனிதர்கள் குற்றச்செயலில் மாட்டிக்கொண்டுவிடுகிறார்கள். கோபம் கொண்டு இன்னொருவனைத் தாக்கும் நபர்களின் நோக்கம் அவர்களை காயப்படுத்துவதோ இல்லை கொன்றுவிடுவதோ இல்லை. ஆனால் அப்படித் தாக்கப்படுபவர்கள் இறந்துவிட்டால் அவர்கள் குற்றவாளி ஆகிறார்கள். நம்முடைய சட்டத்திற்க்கு அப்படி பிரித்துப்பார்த்து சொல்வதற்க்கு எந்தவித கருவிகளும் இல்லை. கொலைகாரர்களை கொலைகாரர்களாக மட்டும் பார்க்கும். 


2

குதிரை வாங்க ஆசைப்படும் இரண்டு சிறுவர்கள். ரோம் சாலையில் ஷுவை பாலிஸ் செய்யும் வேலை செய்யும் அவர்களுக்கு குதிரை வாங்குவது என்பது கஷ்டமான விசயம். அவர்களில் ஒருவனான கியூசெப்ன் அண்ணன் அட்டிலியோ அவர்களுக்கு அமெரிக்க போர்வை வியாபாரம் செய்யும் வேலையை கொடுக்கிறான். அதிகமான காசைக் கொடுக்கும் அந்த வேலையை செய்ய ஒத்துக்கொண்டு அவர்கள் சொன்ன அந்த வயதான பெண்னின் வீட்டிற்க்குச் செல்கிறார்கள். கியூசெப்ன் வலையில் அந்த கைவிடப்பட்ட சிறுவர்கள் மாட்டிக்கொள்கிறார்கள். போலியான போலீஸ் அந்த பெண்ணின் வீட்டில் திருட்டுப் பொருட்க்களை வைத்திருப்பதாக சொல்லி நிறைய பணங்களை திருடுவிடுவார்கள். 


இந்த வலையில் மாட்டிக்கொண்ட அந்த சிறுவர்களை உண்மையான போலீஸ் கைது செய்கிறது. உண்மையைச் சொன்னால் விட்டுவிடுவதாகவும், இல்லை என்றால் சிறையில் அடைத்துவிடுவதாகவும் போலீஸ் அதிகாரி மிரட்டுகிறார். சிறுவர்கள் மறுத்துவிடுவதால் சிறையில் அடைக்கிறார்கள். அங்கு இருக்கும் வார்டன் 60% குற்றங்கள் அதிகரித்தித்து இருப்பதாகவும், சிறைச்சாலை ஒன்றும் கிண்டர் கார்டன் இல்லை என நோந்துகொள்கிறார். ஆனால் பெற்றோர் சார்பாக சிறைச்சாலையை கவனிப்பவர்கள், நிறைய சிறுவர்கள் விசாரணையின் பொருட்டு மாதக்கணக்கில் கிடக்கிறார்கள் என குற்றம் சாட்டுகின்றனர். தங்குவதற்க்கு அறை தருகிறார்கள், உணவு போடுகிறார்கள், பொழுதுபோக்குவதற்க்கு சினிமா காட்டுகிறார்கள். இதைவிட என்ன வேண்டும் என ஒரு சிறுவன் கேட்க்கிறான். அதாவது வெளியே இருப்பதைவிட உள்ளே இருப்பது மிக வசதியாக இருக்கிறது என்ற எண்ணம் அவனுக்கு வருகிறது. 

இருவரையும் வேறு வேறு அறைகளில் அடைத்துவிடுகிறார்கள். போலீஸ் வித்தியசமாக அவர்களை விசாரிக்க முயலுகிறார்கள். இல்லை அவர்களும் சிறுவர்களை ஏமாற்றுகிறார்கள் என்பதுதான் உண்மை. பயந்து போன ஒரு சிறுவன் உண்மையை சொல்லிவிடுகிறான். இதனால் அந்த ஒரு சிறுவர்களுக்கு இடையே சண்டை வருகிறது.

கடைசியில் நீதிமன்றம் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கிறது. கியூசென்னின்  தங்கியிருந்த அறையின் நண்பர்கள் தப்பித்துபோக திட்டம் போடுகிறார்கள். அந்த சமயத்தில்தான் படம் காட்டப்படுகிறது. இருளான அந்த சமயத்தை பயன்படுத்தி அறை நண்பர்க்ள் தப்பித்துவிடுகின்றனர். அப்போது மேகி தனக்கு அவர்கள் எங்கு போயிருப்பார்கள் எனத் தெரியும் என வாடனிடன் சொல்லி காவலாளிகளை அழைத்துக்கொண்டு செல்கிறான். குதிரை லாயத்தில் போலீஸார் விசாரித்துக்கொண்டு இருக்கும் போது அங்கிருந்து நழுவி கியூசென் ஓடி மேகியைத் தேடுகிறான். மேகியும் அவனது நண்பனும் குதிரை மேல் ஏறி பாலத்தில் வரும்போது அவர்களை பிடிக்கிறான் கியூசென். கைகளில் இரும்பு கம்பிகளை வைத்திருப்பதைப் பார்த்து மேகியின் நண்பன் குதிரையிலிருந்து குதித்து ஓடிவிடுகிறான். கம்பியை கீழே போட்டுவிட்டு பெல்ட்டை எடுத்து மேகியை கோபத்தால் அடிக்க ஆரம்பிக்கிறான்.பாலத்திலிருந்து தவறிவிழுந்த மேகி இறந்துவிடுகிறான். கியூசென் கதறி அழுகிறான். குதிரை ஓடிவிடுகிறது. போலீஸ் அவர்களை நோக்கி ஓடிவர படம் முடிவரைகிறது. 




3
குதிரை வாங்க ஆசைப்பட்ட கைவிடப்பட்ட சிறுவர்கள் எப்படி சமூகத்தால் உபயோகப்படுத்திக்கொள்ளப்படுகிறார்கள் என்பதுதன் கதைதான் அடிநாதம். சிறுவனின் அண்ணன், போலீஸார், கூட இருக்கும் அவனது நண்பன் என எல்லோரும் அவர்களை ஏமாற்றுகிறார்கள். கைவிடப்பட்டவர்கள் ஒருவகையில் குற்றவாளிகளாக உபயோகித்துக்கொள்ளும் வாய்ப்பு உள்ளவர்களாக இருக்கிறார்கள். இந்த சமூகம் அவர்களை எப்படி எதிர்கொள்கிறது? ஒவ்வொருவரும் அவர் அவர் தன்னலம் சார்ந்துதான் பார்க்கிறோமோ ஒழிய, இவர்களை இந்த நிலைக்கு ஆக்கியது நாம்தான் என்ற குற்ற உணர்வு இல்லை என்பது வருத்ததுக்குரியது. இதனைத்தான் மேகியின் சார்பில் வாதடும் வக்கில் நீதிமன்றத்தில் சொல்லுவார். 


சிறைச்சாலைகள் என்பது அவர்களின் தவறுகளுக்கு பழிவாங்க ஏற்ப்படுத்தப்பட்ட அமைப்பு என்றே சொல்லலாம்,  நாகரிக சமூக என்பது அதன் குற்றவாளிகளை எப்படி கையாளுகிறது என்பதிலிருந்து தெரிந்துகொள்ளலாம். குறிப்பாக இந்தியா போன்ற நாடுகளில் அரசர்கால சிறைச்சாலை முறைதான் இருக்கிறது. அதாவது தவறு செய்பவனை திருத்துவது அல்ல சிறைச்சாலையின் பணி, பயமுறுத்துவது. ஏழை எளியவந்தான் எப்போதும் அதன் அடக்குமுறைக்கு ஆளாகிறான். ஏற்க்கனவே சமூகத்தால் புறந்தள்ளப்பட்டு இங்கு வந்து  மாட்டிக்கொள்ளும் ஒருவன். சிறையில் மேலும் புறந்தள்ளப்படுகிறான். மனித வாழ்க்கை மேல் அவந்ம்பிக்கை கொள்ளும் அளவு இந்த சமூகம் அவனை மாற்றிவிடுகிறது. 

4
புதுயாதார்தவாத சினிமா உருவாகிவந்த காலகட்டத்தின் படம் இது. மனிதனின் துயரம் பெரிதாக பேசப்படுகிறது, உண்மையில் மனித வாழ்க்கை என்பது மகிழ்ச்சியற்ற ஒன்றா என்று கேட்க்கும் அளவு இந்த வகைப்படங்கள் வாழ்க்கையை பதிவு செய்கின்றன. சாதரண மக்கள்தான் கதையின் கதாமாந்தர்கள். அதே சமயம் அது எப்படி சமூகத்தின் கதையும் கூட. எப்படிப் பார்த்தாலும் கண்டுபிடிக்க கஷ்டமான புள்ளி என்பது, எப்படி இரு சிறுவர்களின் கதை மற்ற எல்லா சிறுவர்களின் கதை ஆகிறது? ஒருவகையில் சமூகத்தின் கதை ஆகிறது. அந்த புள்ளி ஒரு மர்ம்மமாகவே நீடிக்கிறது. 

bicycle thief படத்தில் வரும் போர்வைகளை சேமித்துவைக்கும் மிகப் பெரிய அலமாரிக்கும், இந்த படத்தில் சிறுவர்களை அடைத்து வைக்கும் சிறைச்சாலை காட்சிக்கும் பெரிய வித்தியாசம் இருப்பதைப் போல தெரியவில்லை. அந்த சில நிமிடங்கள் ஒருவனது வாழ்க்கை சமூகத்தின் வாழ்க்கையாக மாறிவிடுகிறதோ? அதுபோன்ற தருணம் மட்டும் தானா என்று சொல்ல முடியவில்லை. 



மனிதனுக்கு பொதுவாக நல்ல எண்ணம் என்பது இல்லை என்றே தோன்ற வைக்கும் அளவு புதுயாதார்தவாத சினிமா இருக்கிறது. மனிதன் மீதான அவநம்பிக்கை. ஒருவேளை இரண்டாம் உலகப்போர் முடிந்த தருணம் என்பதால் அப்படி இருக்கக்கூடும். அதற்க்கேற்றார் போல முடிவு எப்போதும் சந்தோசமானதாக இருப்பதில்லை. இந்த மாதிரியான படங்களைப் பார்க்கும் போது உண்மையில் மனித வாழ்க்கையைப் பற்றிய சோர்வு வருகிறது. அந்த சோர்விலிருந்து எழிந்தவந்த படங்கள்தான் இவை எல்லாம் எனத் தோன்றவைக்கிறது. 



 

 

Comments

Popular posts from this blog

Movie Review- ஜிகர்தண்டா டபுள்எக்ஸ்

உண்மையை நோக்கிய ஒரு பயணம் - புணுவல் - La Voie Lactée (The Milky Way) - 1969

புனுவலின் மீமெய்யியல் - Un Chien andalou (An Andalusian Dog) -1920