இருவர் - படத்தின் காட்சிகளின் பகுப்பாய்வு

 முதல் காட்சி



Shot: MCU

சிறுவனை அணைத்துக்கொண்டு தாய் ஒருத்தி கண்களை மூடியவாறு ரயிலின் ஜன்னலோரம் அமர்ந்திருக்கிறாள். ரயில் வேகமாக ஓடிக்கொண்டிருக்கிறது. கடந்தகாலம் ரயிலுக்கு வெளியே ஓடிக்கொண்டிருக்கிறது, அதனைப் பார்த்து லேசாக சிரித்தவாறு அந்த சிறுவன் இருக்கிறான். அவனது அம்மா அதனைப் பார்க்கவிரும்பாமல் தன் சோகங்களை மறைத்து கண்களை மூடிக்கொண்டிருக்கிறாள். 

இதனை ஏன் CU shot அல்லது MFS ல் எடுக்கவில்லை?

ஒன்று :இருவரின் reaction ஐக் காட வேண்டும், மற்றது: அவர்கள் இரயில் பயணம் செய்வதைக் காட்ட வேண்டும். CU shots ல் reaction இருக்கும் ஆனால் ரயில் பயணத்தை இவ்வளவு சரியாகக் காட்ட முடியாது. MFS ல் ரயில் பயணம் இருக்கும் ஆனால் reactionஐ இவ்வளவு அழுத்தமாகக் காட்ட முடியாது. 

தங்களின் கடந்தகாலத்தைவிட்டு புதுய உலகுக்கு அல்லது எதிர்காலத்துக்கு செல்வோரின் உணர்வு அங்கிருக்கிறது. அதை மிகச்சரியாக கடத்த இந்த shot உதவுகிறது. 

இரண்டாம் காட்சி


Shot: FS  - Dolly In

படத்தயாரிப்பாளர் தனது காரினுள் ஏறப்போகும் போது மோகன்லாலும் அவரது தாத்தாவும் பின்னால் வந்து உதவி கேட்க்கின்றனர். இந்த காட்சியில் ஏன் கார் பாதி இடத்தை அடைத்துக்கொண்டு நிற்க்கிறது? காருக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம்? கார் ஒரு படிமம் எனக்கொள்ளலாம். ஒரு இடத்திலிருந்து இன்னோரு இடத்திற்க்கு பயணிக்கும் தொழில்நுட்பம். அதில் ஏறிப் போகப்போகும் ஒருவரிடம் உதவி கேட்க்க வந்து நிற்க்கும் கதாநாயகன். தானும் அதில் பயணிக்க வேண்டுமெனக் கேட்க்கிறான். ஏழையாக கஷ்டப்படும் கதாநாயகனை பணக்காரனாகும் இடத்திற்க்கு பயணிக்க வைக்கும் தொழில்நுட்பம் திரைப்படம். கார் இந்த இடத்தில் காரில்லை. அது ஒரு திரைப்படத்திற்க்கான நுழைவாயில். படத்தயாரிப்பாளர் காரின் உள்ளே செல்வது போல திரைப்படத்திற்க்கு உள்ளே போக வேண்டி அதன் நுழைவாயிலில் நிற்க்கும் கதாநாயகன். ஒரே ஒரு வாய்ப்பு!! அவன் வேறு இடத்திற்க்கு சென்றுவிடுவான்.

இதனை ஏன் CU shot அல்லது ELS ல் எடுக்கவில்லை?

மேலே சொன்ன விசயங்கள் சரியாக தெரிவிக்க வேண்டுமானால் CU shot ல் நிச்சயம் முடியாது. அதற்க்கு வாய்ப்பில்லை. அதே சமயம் ELS shotலும் இதனைக் காட்ட வேண்டிய அவசியமில்லை, ஏனேனில் இங்கு அதன் சுற்றுப்புறம் அவ்வளவு முக்கியமில்லை. தயாரிப்பாளரின் வீடு அல்லது அவரது அலுவலகம் என்று தெரிந்தால் போதுமானது. 

ஏன் Dolly IN?

FS பிறகு Dolly IN எனப் பின்னால் வரும் காட்சிகளிலும் வந்து கொண்டே இருக்கிறது. FS shotல் காட்சி நடை பெறுகிறது. கதாநாயகன் உதவி கேட்க்கிறான். பிற்கு அவனது உணர்ச்சிகள் dolly In shotல் காட்டப்படுகிறது. உதவி கேட்ப்பது  பிறகு அதனால் ஏற்ப்பட்ட ஏமாற்றம். 

மூன்றாவது காட்சி

Shot: FS  - Dolly In

கதாநாயகன் உடற்ப்பயிற்ச்சி செய்துகொண்டிருக்கிறான். அவரது அம்மா அவனுக்கு உணவு ஊட்டுகிறாள். தனது கனவுக்காக கதாநயாகன் கஷ்டப்பட்டு உழைக்கிறான். அவரகளது குடும்பம் அதற்க்கு துணையாக நிற்க்கிறது. 

மேலே சொன்ன அனைத்து காரணங்களும் இதற்க்கும் பொருந்தும். தனது கனவுக்காக உழைப்பதும், குடும்பத்தின் ஆதரவால் அவன் மகிழ்வதும்.

நான்காவது காட்சி


Shot: FS  - Dolly In

கதாநாயகன் உதவி கேட்க்கிறான். பிற்கு அவனது உணர்ச்சிகள் dolly In shotல் காட்டப்படுகிறது. இரண்டாவது காட்சிக்கு சொன்ன அனைத்தும் இதற்க்கும் பொருந்தும்.

ஐந்தாவது காட்சி


Shot: MS  - Dolly In

கதாநாயகன் நம்பிக்கை இழக்கிறான், ஆனால் அவனது குடும்பம் அவனை விடாமல் ஊக்குவிக்கிறது. முதல் காட்சியில் ரயிலில் பயணம் செய்த சிறுவன் போலில்லாமல் ஜன்னலைப் பார்க்க விரும்பாமல் திரும்பிக்கொண்டு அம்மாவிடம் விவாதம் செய்பவனாக இருக்கிறான். 

இதனை ஏன் CU shot அல்லது LS ல் எடுக்கவில்லை?

கதாநாயகனின் ஏமாற்றம் பிறகு அவனுடைய குடும்பத்தின் ஆதரவு. இதுமட்டும்தான் இந்த காட்சியில் காட்டப்பட வேண்டிய ஒன்று. CUல் தனித்தனியாக ஒவ்வொருவரின் உணர்ச்சியாக காட்ட வேண்டிவரும், ஒரே சட்டகத்தில் அதனைக் காட்டும் போது வரும் முழுமை CUல் வராது. LS shotல் உணர்ச்சிகளைக் காட்ட முடியாது. Dolly In ல் உணர்ச்சிகளை எளிதாக கடத்த முடியும்.

ஆறாவது காட்சி


Shot: MS

கதாநாயகனுக்கு மேக்கப் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அவனது வெகுநாள் கனவு. சைக்கிள் ஓட்டத்தெரியுமா எனக் கேட்டதற்க்கு இல்லை என்று சொன்னதும் ஆளை மாற்றச் சொல்லி சொல்வார்கள். அவனது வருங்காலம் நிச்சயமில்லாமை பின்னால் இருக்கும் இருட்டிலிருந்து தெரிந்துகொள்ளளாம். இப்போதைக்கு அவன் முகத்திற்க்கு வெளிச்சம் இருக்கிறது. ஆனால் அது எவ்வளவு நாளைக்கு என்பது ஒரு கேள்விக்குறி!

இந்த காட்சியில் தான் Dolly IN இல்லாமல் இருக்கும், முன்னால் இருந்த காட்சிகளில் WS பிறகு Dolly In என காட்சி அமைக்கப்பட்டிருக்கும். இதில் காட்சி நிலையாக இருக்கிறது. அவனது உணர்ச்சிகள் மட்டும் மிக முக்கியமாக தெரியவேண்டும் அதே சமயம் மற்றவர்களின் நடவடிக்கையும் தெரிய வேண்டும். 

அப்படியானால் ஏன் Dolly In கடைசியாக இருக்ககூடாது?

இருவரின் உரையாடல் நிகழ்வதைக் காட்ட வேண்டும். மேக்கப் போடுபவர் கதாநாயகனை விட உயர்ந்தவனாக இருக்கிறார். அவனை அதட்டுகிறார். Dolly In போனால் அதனைச் சரியாக காட்டமுடியாமல், கதாநாயகனின் உணர்ச்சிகளை மட்டும் தெரிவிக்கும் விதமாக இருக்கும். இப்போது இருவரின் உரையாடல் மூலம் கதாநாயகன் அடையும் உணர்ச்சிகளை காணமுடிகிறது.

இப்படி காட்ச்சிகளை பகுப்பாய்வு செய்வது எனக்கு ஒரு திறப்பை அளிப்பதால் அதனைத் தொடர்ந்து செய்வேன். 

Comments

Popular posts from this blog

Movie Review- ஜிகர்தண்டா டபுள்எக்ஸ்

உண்மையை நோக்கிய ஒரு பயணம் - புணுவல் - La Voie Lactée (The Milky Way) - 1969

புனுவலின் மீமெய்யியல் - Un Chien andalou (An Andalusian Dog) -1920