Save the Cat - புத்தக வாசிப்பு பற்றி
இந்த கட்டுரை புத்தகத்தில் இருக்கும் கருத்தின் தொகுப்பு. என்னுடைய கருத்தை பதிவிடவில்லை.
Log Line:
Log line மிகவும் முக்கியமான ஒன்று. அப்படி ஒன்றை சொல்ல முடியவில்லை என்றால் நிச்சயம் நம்முடைய கதை பார்வையாளர்களால் புரிந்துகொள்ள முடியாது. அதனால் முதலில் log line ஐ எழுதிவிட்டு திரைக்கதையை எழுதுவது பயனுள்ளதாக இருக்கும் அல்லது log line திரைக்கதையை மேலும் செழுமைப்படுத்தும். அதனைப் பற்றிய சில முக்கிய கருத்துகள்,
1. முரண்பாடுகள் கொண்டாதகவும் உணர்ச்சிகரமானதாகவும் இருக்க வேண்டும். அதைப் படித்தால் நமைச்சல் எடுத்தவன் எப்படி சொறிய வேண்டும் என்ற ஆர்வம் கொண்டிருப்பானோ அதைப் போல இருக்க வேண்டும்
2.அது ஒரு மன உருவகத்தை உருவாக்க வேண்டும். அதனுள் முழுப் படமும் இருக்க வேண்டும், முடிந்தால் காலவரை இருக்க வேண்டும். கேட்டவுடன் மனதை அது வருட வேண்டும்.
3. பார்வையாளர்கள் மற்றும் பட்ஜெட்: இது என்ன வகையான பார்வையாளர்களுக்கு? என்ன வகையான படம்? படத்தின் பட்ஜெட்
4. தீவிரமான தலைப்பு. Log lineம் படத்தின் தலைப்பும் படத்தைப் பற்றிய முழு விவரங்களை, ஆர்வத்தையும் தூண்டுவதாக இருக்கிறது.
அனுபவத்தை உபயோகப்படுத்திக்கொள்ளுதல்:
எந்த கதையும் சூன்யத்திலிருந்து வருவதில்லை. கடந்த 100 வருட திரைப்பட வரலாற்றில் எல்லாமும் (உதாரணமாக கதை, தொழில்நுட்பம்) இன்று இருப்பதைப் போல முதல் நாளிலிருந்தே இல்லை. அவை தொடர் வளர்ச்சியை அடைந்திருக்கின்றன. எல்லவற்றையும் தெரிந்து கொள்வதென்பது கடிமான விசயம். குறைந்தபட்சம் அவற்றைப் பற்றிய புரிதல் நமக்கு வேண்டும். நாம் மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பிக்க வேண்டியதில்லை. நமது முன்னோர்கள் எங்கு விட்டார்களோ அங்கிருந்து ஆரம்பிக்க வேண்டுமென்பதே விருப்பம்.
ஆசிரியர் அப்படி திரைப்படத்தை புரிந்து கொள்ள பத்து வகையான சினிமா வகைகள் இருக்கின்றன என அவர் சொல்லிகிறார். அதன் பட்டியல் கீழே
- Monster in house
- Golden Fleece
- Out of bottle
- Dude with the problem
- Rites of Passage
- Buddy love
- Whydunit
- The fool triumphant
- Institutionalized
- Superhero
யாருடைய கதை?:
அடுத்த முக்கியமான விசயம் என்பது யாருடைய கதை இது? காரணம் நாம் கதையுடன் இணைந்துகொள்ள அது மிக இன்றியமையாதது. இல்லை என்றால் பார்வையாளர்கள் தன்னை கதையுடன் இணைத்துக்கொள்ளும் வாய்ப்பு இல்லமல் ஆகிறது. சரி ஒரு ஆணைப் பற்றியோ பெண்ணைப் பற்றியோ இருக்க வேண்டியது இல்லை. ஆனால் பார்வையாளர்கள் தன்னை அதனுடன் பொருத்துக்கொள்ள வேண்டிய வாய்ப்பை அளிக்க வேண்டும். மிச சரியான நாயகன் என்பவன் மிக முரண்பாடு உடையவனாக இருக்க வேண்டும், நீண்ட உணர்ச்சி பயணமாக அமைய வேண்டும். அதுமட்டும் இல்லாமல் அவனது முதன்மையான இலக்கை நம்முடைய வேர்களில் இருக்க வேண்டும்.
வடிவம்:
எந்தவொரு கலையிலும் வடிவம் என்பது முக்கியமானது. உதாரணமாக சிறுகதை, நாவல் என அதைச் சொல்லிக்கொண்டே போகலாம். அது போல திரைக்கதையிலும் வடிவம் என்பது முக்கியமானது. கூர்தீட்டப்பட்ட கத்திதான் வடிவம். அப்போதுதான் அது மிகச்சரியாக அது செய்ய வேண்டிய வேலையைச் செய்யும். இந்த புத்தகத்தின் ஆசிரியர் அப்படி அதன் வடிவத்தை 15 புள்ளிகளின் பின்வருமாறு சொல்கிறார்கள்
- Opening Image
- Theme started
- The set-up
- Catalyst
- Debate
- Break into two
- Fun and Games
- B story
- Midpoint
- Bad guys Close IN
- All is lost
- Dark Night of the soul
- Break into three
- Finale
- Final image
மாறாத திரைக்கதையின் விதிகள்:
Save the Cat:
கதைக்குள் நம்மை இழுத்துச் செல்லும் மிக முக்கிய காரணியாக இருப்பது கதாநாயகனை விரும்பும் படி செய்வது. அது நாயகனின் பயணத்தில் நம்மையும் பயணக்க வைக்கும். கதாநாயகனின் அறிமுக காட்சி என்பது இந்த வகையில் முக்கியமான ஒன்று. அவன்/அவள் செய்யும் செயல் அந்த சில நிமிடங்களில் அவனை/அவளை வடிவமைக்கிறது மற்றும் யார் என்று பார்வையாளர்களுக்கு காட்டுகிறது.
Arc Vs Flat:
மிக முக்கியமான ஒன்று என்பது நடிகர்களின் மாற்றம் இதை Arc எனக் குறிப்பிடுகிறார்கள். கதையின் துவக்கத்தில் இருந்த நாயகன் ஒரு முரணை எதிர்கொள்கிறான். அதனால் தான் மாற வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகிறான். அப்படி மாறவில்லை என்றால் அவனால் வெற்றியடைய முடியாது. அந்த மாற்றம் நாயகனின் அகமும் புறமும் நடக்கும் ஒன்று. உதாரணமாக கோழை வீரன் ஆவான். அதே சமயம் மாறத ஒருவன் என்றால் அது வில்லன். மற்ற எல்லோருமே மாறி இருப்பார்கள் வில்லனைத் தவிர. அப்படி கதாபாத்திரங்களில் மாற்றம் இல்லை என்றால் அதை Flat எனச் சொல்லுகிறார்கள். Flat ஆன கதையை யாரும் விரும்புவது இல்லை.
Breaking the forth wall:
அடுத்த முக்கியமாக விசயம் என்பது தேவை இல்லாததை படத்தினுள் கொண்டுவருதல். அது மிக மோசமான செயல்பாடு. அப்படி செய்தால் பார்வையாளரை அது கதையிலிருந்து வெளியே கொண்டு வந்துவிடும்.
திரைக்கதையை சரிபார்க்கும் பட்டியல்:
- கதாநாயகனின் இலக்கு சரியாக செயல்படுத்தப்பட்டதா மற்றும் அதனை அடைய நாயகனே முயற்ச்சிக்கிறானா?
- திரைப்படம் என்பது காட்சி ஊடகம். அதை மொழி ஊடகமாக மாற்றக்க்கூடாது.
- நாயகன் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் வில்லன். உண்மையில் வில்லன் நாயகனைவிட ஒரு படி மேலே இருக்க வேண்டும். அந்த இடைவெளியை குறைக்க நாயகன் செய்யும் முயற்ச்சிதான் படத்தின் சுவாரஜ்யத்தை கூட்டும்.
- திருப்பம் மிகவும் முக்கியம். படம் வேகமாக செல்கிறது என்றாலும் அது ஒரு கட்ட்த்திற்க்கு மேல் சலித்துவிடும். எதற்க்காக இந்த வேகம் எனக் கேட்க்க தோன்றும். கதையின் பாதிக்கு மேல் அது மிக தீவிரடைய வேண்டும்.
- திரைக்கதை என்பது உணர்ச்சிகளின் கலவையால் ஆனது. ஒரே உணர்ச்சி மட்டும் (உதாரணமாக காமெடி) இருக்குமே ஆனால் அது சலிப்பை ஏற்ப்படுத்தும்.
- வசனங்கள் ஒருவர் பேசுவது மற்றவர் பேசுவதைப் போல இருக்ககூடாது. அப்படியானால் ஒரு வசனத்தை படித்தால் இது யார் பேசினார்கள் என்று கதாபாத்திரத்தைப் பார்க்காமல் சொல்ல முடிந்தால் அது நல்ல வசனம்.
- கதையில் வரக்கூடிய மத்த பாத்திரங்களை நினைவில் வைத்துக் கொள்ள முடிகிறதா. அப்படியில்லை என்றால் அந்த குறையை நீக்க வேண்டும். ஒவ்வொருவரும் தனித்துவமானவர்களாக இருக்க வேண்டும்
- நாயகனின் அக வளர்ச்சி (உதாரணமாக கோழை வீரனாக மாறுவது) கதையின் ஆரம்பித்தில் இருந்து முடிவு வரை சீராக இருக்கிறதா?
- எல்லா பாத்திரங்களும் அதன் முதன்மையான இலக்கை அடைவதற்க்காக முயற்ச்சியை செய்கின்றனவா?

Comments
Post a Comment