முதற்க்காட்சி
Shot: MWS
பசியால் வாடிய கூட்டம் வேலைக்காக அந்த அதிகாரியைப் பார்த்து நிற்க்கும், ஆனால் அதிகாரியோ இல்லாத ரிச்சியை அழைப்பார்.
இதனை ஏன் MWS ல் எடுக்க வேண்டும்?
கூட்டத்தைக் காட்ட வேண்டும் அதே சமயம் அவர்களின் உணர்ச்சிகளையும் காட்ட வேண்டும். MS வைத்தால் கூட்டம் தெரியாது ஆனால் உணர்ச்சி தெரியும், WS வைத்தால் கூட்டம் தெரியும் உணர்ச்சி தெரியாது. இரண்டும் தெரிய வேண்டுமானால் சரியான shot MWS.
இரண்டாவது காட்சி
Shot: EWS
வேலைவாய்ப்பு அலுவலகத்தின் முன் நிற்க்கும் கூட்டம் சிரிதாக தெரியும் அளவு கட்டம் பெரிதாக இருக்கிறது. வேலைவாய்ப்பு அலுவலகம் அந்த கூட்டத்தைப் பொருத்தவரை அவ்வளவு பெரிதாக இருக்கிறது, ஏனெனில் அடுத்த வேளை சோற்றுக்கு வழியில்லாமல் அங்கு நின்றிருக்கிறது கூட்டம். அந்த கூட்டத்திலிருந்து ஓடிவருகிறான் என்பதை இப்படிக்காட்டினால்தான் மேலே சொன்ன விசயங்கள் தெரிவிக்க முடியும். Folow up shot வைத்திருந்தால், ஓடிவருபவன் கூட்டத்திலிருந்து விலகி செல்வது போல இருக்கும், கதையின் படி அவன் திரும்ப அங்கு சென்று சேர வேண்டும்.
மூன்றாவது காட்சி
Shot: FS
ஒரே காட்சியாக கட் செய்யாமல் EW Shot, Full Shot ஆக மாறுகிறது. கால்கடுக்க நின்று இனி கிடைக்காது என்று நினைத்து தள்ளி வந்து அமர்ந்தவாறு மண்ணைக் கிளரிக்கொண்டிருக்கும் கதாநாயகனிடம் உனக்கு காது செவிடா எனக் கேட்டு வா என அழைக்கிறான் ஓடி வந்தவன். இருவரும் எழுந்து ஓடுகின்றனர்.
ஒரே காட்சியாக அமையுமாறு இந்த காட்சி அமைக்கப்பட்டிருக்கிறது. கூட்டத்திலிருந்து ஓடிவந்தவன் கதாநாயகணை அழைத்துக்கொண்டு போய் கூட்டத்தில் சேர்க்கும் வரை. அமர்ந்திருப்பவனையும், நின்றிருப்பவனையும் காட்ட FS உபயோகப்படுத்தப்பட்டிருக்கிறது. இல்லை என்றால் கட் செய்து காட்ட வேண்டிவரும். நீண்ட காட்சிகளை அமைப்பது ஒரு வகையில் பார்வையாளனால் அங்கு வாழ முடியும் என்ற சாத்தியத்தை கொடுக்கிறது. அதை புதுஎதார்த்தவாத சினிமா நன்றாக கையாளுகிறது. இது போன்ற நீண்ட காட்சிகள் அந்த வகை சினிமாவின் ஒரு அடையாளம் எனலாம்.
நான்காவது காட்சி
Shot: MS
ஆசையாக கதாநாயகன் அதிகாரியிடம் நெருங்குகிறான். மற்றவர்களிடம் சமாதனம் சொல்லிக்கொண்டு இருக்கும் போது ரிச்சியை பார்க்கிறார் அதிகாரி.
இன்னும் Close Up shot போனால் கூட்டத்தினருடன் அவர் உரையாடுவது சரியாக தெரிவிக்க முடியாது. Long shot போனால் அதிகாரியின் உரையாடுதலுக்கு முக்கியதும் இல்லாமல் கூட்டதினர் போடும் கூச்சலுடன் சேர்ந்து அதுவும் கூச்சலாக இருக்கும்
ஐந்தாவது காட்சி
(1)
(2)
Shot: MS (1), MCU (2)
அதிகாரிக்கும் ரிச்சிக்கும் இடையே நடக்கும் உரையாடல். ரிச்சி அந்த கூட்டத்தில் இருந்து வந்தவன், மற்றவர்கள் அவனைப் போல தனக்கும் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கின்றனர். அதனால் MS
அதே போல அதிகாரி பேசுவது MCU ல் காட்டப்படுகிறது, அதில் இருவரின் உணர்ச்சியும் தெளிவாக தெரிகிறது. அங்கு கூட்டதின் உணர்ச்சி இல்லை. தனிப்பட்ட இருவரின் உணர்ச்சி மட்டும்தான் ஆனால் ரிச்சி பேசும் போது அப்படியில்லை அது கூட்டத்தின் உணர்ச்சி. இல்லை அதிகாரி ரிச்சியை அந்த கூட்டத்தில் ஒருவனாகத்தான் பார்க்கிறார். ரிச்சி அதிகாரியை தனிப்பட்ட அல்லது தனக்கு மேல் நிலையில் இருப்பவராக பார்க்கிறான். அதிகாரி கூட்டதில் ஒருவர் இல்லை. அதனால் High angle & low angle இங்கு உபயோகப்படுத்தப்படுகிறது.
ஆறாவது காட்சி
Shot: MWS
கூட்டத்திலிருந்து ரிச்சி விடைபெறுகிறான். உன்னிடம் சைக்கிள் இல்லை என்றால் வேலை கிடைக்காது என எச்சரிக்கிறார். கூட்டத்தில் அவன் ஒருவனாக ஆக வேண்டியதுதான், மறுபடியும் அவர்களைப் போல வந்து இரண்டு வருடம் நிற்க்க வேண்டியதுதான். இதனை MCU ல் வைத்து இருக்கலாமா? ஒரே காட்சியாக ரிச்சி கூட்டத்தைவிட்டு விலகிப் போகும் அந்த இடத்தைக் காட்ட MWSல் எடுக்கப்பட்டிருக்கிறது. அது மட்டும் இல்லாமல் அவனது நிலைமைக் காட்ட இது ஏதுவாக இருக்கிறது. உரையாடல் நிகழ்கிறது அதனால் Medium shot ல் காட்டப்படுகிறது. அதே சமயம் ரிச்சியின் போட்டியாளர்கள் கீழே வாய்ப்புக்காக காத்து நிற்க்கிறார்கள். ரிச்சியின் கால் நழுவி கீழே விழுந்துவிடுவானா என அந்த கூட்டம் காத்து நிற்க்கிறது. அப்படிப்பட்ட சூழலைக் காட்ட Wide shot ஏதுவாக இருக்கிறது.
சில காட்சிகளை வேண்டுமென்றே இங்கு காட்டவில்லை. ஆர்வம் இருபவர்கள் அதனை ஆராய்ந்துபார்க்கலாம்.
Comments
Post a Comment