Stalker - பட காட்சிகளின் பகுப்பாய்வு
Stalker படத்தின் காட்சிகளை பகுப்பாய்வு செய்து புரிந்துகொள்ளும் முயற்ச்சி. இதற்க்குப் பதிலாக இன்னோரு shot ஏன் வைக்க கூடாது என்று கேட்ப்பதைவிட, இது எந்த அளவிற்க்கு நமக்கு பதிப்பை ஏற்ப்படுத்தியிறுக்கிறது என்பது முக்கியம். இதனைக் கருத்தில் கொண்டு பகுப்பாய்வு செய்கிறேன்.
முதல் காட்சி
Shot: FS - Dolly IN
லேசாக திறந்து இருக்கும் இரண்டு கதவுகளின் வழியே கட்டில் தெரிகிறது. சுவர்கள் எல்லாம் இருட்டில் இருக்க உள் அறையில் மட்டும் லேசான வெளிச்சம் இருக்கிறது. கேமிரா நகரும் போது நிச்சயம் நம்முடைய கவனம் அந்த சிறிய இடைவெளி வழியே தெரியும் அந்த காட்சியில் குவிக்கிறது. இது இயக்குனரின் மந்திரம் எனலாம். இடம் மற்றும் அதன் மக்களைக் காட்ட இது சிறந்த shot.
இரண்டாம் காட்சி
Shot: CU - Truck
முதலில் டேபிளை Close up காட்டும் போது வீட்டின் பக்கத்தில் ரயில்வே லயன் இருப்பது கிளாஸ் ஆடுவதன் மூலம் காட்டப்படுகிறது. மெதுவாக Truck பண்ணி கட்டலில் படுத்து இருக்கும் ஒவ்வொருவராக காட்டப்படுகிறார்கள். எல்லோரும் முதலிக் தூங்குவது போல இருந்தாலும் Camera திரும்பவரும் போது ஒவ்வொருவராக கண் விழிக்கிறார்கள் காட்சி அந்த டேபிளில் வந்து முடிகிறது. அப்போது இரயில் கடந்து போயிருக்கிறது.
Close up காட்சியில் detail கிடைக்கிறது என நினைக்கிறேன். முதலில் அறையின் முழு வடிவத்தையும் FS பார்த்துவிட்டோம். இப்போது கேமிரா CU நகரும் போது சின்ன விஷயங்களை நம்மால் பார்க்க முடிகிறது.
மூன்றாவது காட்சி
Shot: FS - PANநாயகன் எழுந்து தனது உடைகளை மாற்றிக்கொள்கிறான். பிறகு அறையை கடந்து வெளியே செல்ல விரும்புகிறான். FS ஒரு கட்டத்தில் CU ஆக மாறுகிறது அந்த மாறும் நொடியை கண்டுபிடிப்பது கடினமாக இருக்கிறது. படத்துடன் ஒன்றிவிட்டவறுக்கு அது மிக கடினம் எனற பொருளில் சொல்லுகிறேன். FS தான் நாயகனின் action எளிதாக காட்டமுடியும், அதுமட்டுமில்லாமல் மற்ற குடும்ப உறுப்பினர்கள் பற்றியும் காட்ட முடியும்.
நான்காவது காட்சி
Shot: CU -Dolly Out
அந்த சின்ன கதவின் இடைவெளி வழியே கதாநாயகி எழுவது தெரிகிறது. மாஸ்டர்ஸ் என்று சொல்லக்கூடிய இயக்குநர்களில் இவரும் ஒருவர். கலை சில இடங்களில் தர்க்கத்தை மீறிச் செல்லும், அப்படிச் சென்றால்தான் அது கலை. அப்படிப்பட்ட இடங்களில் இதுவும் ஒன்று என நினைக்கிறேன். இதுவரை ஒரு வார்த்தை கூட பேசாமல் ஆனால் கதையைக் கூறிக்கொண்டு செல்கிறார் இயக்குநர்.
நீண்ட நேர காட்சிகள் நம்மை அதனுள் நாம் வாழ்ந்த அனுபவத்தைக் கொடுக்கிறது. சில காட்சிகள் நம்மை மயக்குகிறது. உதாரணமாக FS கதவின் இடைவெளி வழியே நகர்ந்து வரும் காட்சி பிறகு அது CU shot ஆக மாறி டேபிளில் கிளாஸ் ஆடுவது. Dolly In & Truck movement என காட்சிகள் மாறும் போது அது நம்மை உண்மையில் ஆச்சரியப்பட வைக்கிறது.
அவர் செய்த படங்களை விட அவர் ஏன் இப்படி யோசித்தார் என்பது தான் மிக முக்கியம். அப்படிப் பார்க்கையில் நாம் அதனை ஆராய்ந்துவருகிறோம். நிச்சயம் ஒருநாள் நம்மால் அந்த கலைஞனை தரிசிக்க முடியும்.







Comments
Post a Comment