கலை ஒரு அறிமுகம்

குறிப்பு: இது ஜெயமோகன் அவர்கள் எழுதிய நவீன தமிழ் இலக்கியம் ஒரு அறிமுகம் என்ற புத்தகத்தின் இரண்டாவது பாகத்தில் உள்ள கருத்துக்களை சினிமாவிற்க்கு பொருத்திப் பார்க்கும் முயற்ச்சி.
சினிமா என்பது தமிழகத்தில் பொழுது போக்கு என்ற எண்ணமே பிரதானமாக உள்ளது. ஆனால் அதற்க்கு நான் முற்றிலும் உடன்படவில்லை. அடிப்படையில் சினிமா என்பது ஒரு கலை வடிவமே. கலை என்பதற்க்கும் பொழுது போக்கிற்க்கும் வித்தியாசம் இருக்கிறதா? (இந்த வினாவை கொஞ்ச நேரம் ஒற்றி வைப்போம்) அப்படியானால் கலை என்பது என்ன என்று தெரிந்துகொள்வது முக்கியம். 


 மனிதன் இந்த பிரபஞ்சத்தைப் பற்றி அறிந்து கொள்ள இருக்கும் முறைகள் என்பவை அ)தியானம், ஆ)கற்பனை, இ)தர்க்கம். தியானம் பற்றி ஒருவர் தெரிந்துகொள்ள நிறைய புத்தகங்கள் இருக்கிறது. அதனால் அதனைக் கடந்து செல்கிறேன். அதே சமயம் கற்ப்பனை மூலம் அறிந்துகொள்ள கலைகள் இருக்கிறது. தர்க்கம் என்றால் அறிவியல் வந்துவிடுகிறது. பொதுவாக எல்லா மனிதர்களுக்கும் அனுபவம் என்பது பொது. அப்படிப்பட்ட அனுபவத்துடன் கற்ப்பனை சேரும் போது கலைகள் உருவாகிறது. யாரும் வெற்று கற்ப்பனையாலோ அல்லது வெற்று அனுபவத்தாலோ கலையை உருவாக்க முடியாது.

கலைகளை பின்வருமாறு ஜெயமோகன் வகைப்படுத்தியிறுக்கிறார். 

 இசை-ஓவியம்-நடனம்-இலக்கியம்

 அருவமானது முதலில் இருக்கிறது. அதன் மறு எல்லையில் இலக்கியம் இருக்கிறது. அல்லது இப்படிச் சொல்லலாம், கற்ப்பனை அதிகம் அதேசமயம் தர்க்கம் குறைவு முன்னதில், தர்க்கம் அதிகம் கற்ப்பனை குறைவு பின்னதில். சினிமாவை ஒரு கலையாக எங்கே வைப்பது? 

 இசை என்பது முழுக்க முழுக்க அகவயமானது. கர்நாடக கச்சேரிகளில் அமர்ந்து கேட்க்கும் ஒவ்வொரு ரசிகனுக்கும் ஒவ்வொரு மாதிரியான அனுபவம் ஏற்ப்படும். திட்டவட்டமாக அதை வரையறை செய்ய முடியாது. யார் அதிகமான கற்ப்பனையை கோர வைக்கிறார்களோ அவர்கள் பெரிய வித்வான்கள். 

 அடுத்ததாக ஓவியம். வடிவங்களும், வண்ணங்களும் கலந்து உருவான ஒன்று. உதாரணமாக GUERNICA ஓவியத்தை நினைத்துப் பாருங்கள். PICASSO அதை இரண்டாம் உலகப் போரின் போது தீட்டிய ஓவியம். குதிரையும், எருதும் ஸ்பேனிஸ் காலச்சாரத்தின் ஒரு அங்கம். இந்த ஓவியம் என்ன சொல்ல வருகிறது? எனக் கேட்ப்பதைப் போல முட்டாள்தனம் வேறு இல்லை. போரின் ஒரு சித்திரம் அங்கிருக்கிறது. போரின் கோரமுகம் பார்ப்பவர்கள் எல்லோர் மனதில் ஒருவித பதற்றத்தையும், பயத்தையும் உருவாக்கிறது. ஆனால் உங்கள் மனதில் தோன்றும் போர்களத்தின் சித்தரம் என்பதம் என் மனதில் தோன்றுவது வேறு. அதன் மூலம் நீங்கள் உருவாக்கி கொள்ளும் சித்திரம் வேறு. எருதுகள் ஒரு குறீயிடு. குறீயிடு என்பது ஒவ்வொரு கலாச்சராத்திற்க்கும் மாறுபடும்.இந்திய கலச்சாரத்தில் எருது என்பது சிவனின் வாகனம். ஒரு வகையில் வாயிற்க்காவலன். அவரை வணங்க வேண்டும். அதே அர்த்தத்தில் மற்ற கலாசாரத்தில் இல்லை. எனவே இந்தியனுக்கும், ஐரோப்பியனுக்கும் அது வேறு வேறு. அதே சமயம் ஒரே கலாசராத்தில் இருப்பவனுக்கும் இடையேயும் மாறுபடும். 

 நடனம் ஒரு வகையில் நகரும் ஓவியம் எனலாம். பரத நாட்டியம் முத்திரைகள் மூலமும், பாவனைகள் மூலமும் ரசிகனுனை தொடர்புருத்துபவை. சிலசமயம் புராணங்கள் அதன் வழியே நடித்துக் காட்டப்படும். 

 இலக்கியம் என்பது மொழியில் நிகழ்வது. கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரை என ஜெயமோகன் அதனை வரிசைப்படுத்திகிறார். கவிதை என்பதில் தர்க்கம் கிட்டத்தட்ட இல்லை அதே சமயம் கற்ப்பனை என்பது நிறைய. இங்கே அகராதிகளை வைத்து குறுந்தொகையை புரிந்துகொள்ளும் ஒருவன் எப்படி படிப்பான் என்பதை புரிந்துகொள்ளலாம். அதே சமயம் கட்டுரையில் கிட்டத்தட்ட கற்ப்பனை என்பது இல்லை, தர்க்கம்தான் மேல் ஓங்கி நிற்க்கும். படிமம் மற்றும் நுண் சித்தரிப்புக்கள் என்பது இங்கு முக்கியமான ஒன்று. அது வாசகனிடன் தொடர்புறுத்துகிறது. உதாரணமாக சிலம்பு. சிலம்பு என்றதும் கண்ணகி வருகிறாள், அவளுடன் அம்பை வருகிறாள். அப்படியே அதை விரித்துக்கொண்டு செல்லலாம். 

 கலைகளை அறிந்துகொள்வதில் பண்பாடு என்பது மிகவும் முக்கியமான ஒரு கூறு. கலை என்பது பல நூற்றாண்டுகாலமாக மனித இனத்தால் வளர்க்கப்பட்டு இங்கு நம் கைகளில் இருக்கிறது. எல்லாவற்றையும்விட இலக்கியம் சற்று பண்பாட்டிற்க்கு கட்டுப்பட்டது அல்லது அந்த நிலத்திற்க்கு உட்ப்பட்டது. ஒவ்வொரு கலை வடிவத்திற்க்கும் அதற்க்கான ஊடகம் இருக்கிறது. ஓவியம் என்றால் அது காட்சி ஊடகம், இலக்கியம் என்றால் அது மொழியின் ஊடகம். மொழி என்பது இன்னும் பண்பாட்டுக்கு கூறுகள் அதிகமாக இருப்பது, தர்க்கத்திற்க்கு பக்கத்தில் வருவது. அதனாலே இலக்கியம் அந்த பண்பாட்டின் மிக முக்கிய பங்குகளை வகிக்கிறது. இன்னோரு வகையில் சொன்னால் எழுத்தாளர்கள் பண்பாடுகளை உருவாக்குகிறார்கள். பாரதியை எண்ணிப்பாருங்கள் நான் சொன்னது பற்றிய புரிந்து கொள்ளலாம். 

 இப்போது சினிமா பற்றி வருமோம். கலைகளில் கடைசியாக வந்தது. ஒருவகையில் அது குழந்தை. சினிமாவின் ஒரு சிறப்பியல்பு, அது எல்லா கலைகளையும் தன் அகத்தே கொண்டது. காட்சி ஊடகமும் கூட. ஆனால் ஓவியம் போல அது காட்சி ஊடகம் மட்டுமே இல்லை. ஒருவகையில் அது மொழியையும் தன் ஊடகமாகக் கொண்டது. அப்படியானால் அதனை எந்த வரிசையில் வைப்பது? 

 அ) எந்த சினிமா தன்னை முழுவதும் காட்சி ஊடகமாக வைத்துக்கொள்கிறதோ (மொழியின் துணையே இல்லாமல்) அப்போது அது நடனத்திற்க்கும் இலக்கியத்திற்க்கும் இடையே வரும். அப்படியான ideal நிலை சினிமா இல்லை என்பதே உண்மை. 

 ஆ) காட்சி ஊடகத்தை முழுவதுமாக நம்பி மொழியின் கூறுகளை குறைத்தவாறு இருந்தால் அதை கவிதைக்கும், சிறுகதைக்கும் இடையில் வைக்கலாம். உதாரணமாக Tarkovsky படங்களைச் சொல்லாம். கதை தர்க்கத்தை கோறுகிறது. அதனால் கவிதையை அதனால் தாண்டிப் போக முடியாது. சில சமயம் கவிதையை நெருங்கி வரலாம். 

 இ) மொழியை பெரிதும் நம்பி, தத்துவத்திற்கு மிக நெருக்கம் காட்டும் படங்கள் நாவலுக்கு அடுத்த இடத்தை குடுக்கலாம். போரும் வாழ்வும் நாவல் உருவாக்கும் உலகை ஒரு போதும் சினிமாவால் உருவாக்க முடியாது.

 சினிமா என்பது அடிப்படையில் இந்த உலகை அறியும் முறை. எப்படி என்றால்? வேறு வேறு வாழ்க்கையின் மூலம் அதனை ரசிகனால் அடையமுடியும். அப்படி அறிதல் முறையாக இருப்பதாலே அது கலையாகிறது. அப்படியானால் கேளிக்கைக்கும் கலைக்கும் என்ன வேறுபாடு? வணிகப்படங்கள், கலைப் படங்கள் என்ற வேறுபாடு உண்மையிலே இருக்கிறதா? அடுத்த பதிவில் விரிவாக இதை விவாதிப்போம்.

Comments

Popular posts from this blog

Movie Review- ஜிகர்தண்டா டபுள்எக்ஸ்

உண்மையை நோக்கிய ஒரு பயணம் - புணுவல் - La Voie Lactée (The Milky Way) - 1969

புனுவலின் மீமெய்யியல் - Un Chien andalou (An Andalusian Dog) -1920